கொச்சின்: கடைசி கட்ட சோதனை ஒட்டத்தில் போர் விமான தாங்கி கப்பல் விக்ராந்த் உள்ளது. இதனை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

23 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட போர் விமானங்களை ஏந்தும் போர்க் கப்பலான விக்ராந்த்-ஐ கொச்சி நகரில் சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
40,000 டன் எடை கொண்ட இந்த கப்பல் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்திய கப்பல் படையில் சேர உள்ளது. இந்தியாவின் முதல் போர் விமானம் தாங்கும் மிகப்பெரிய கப்பலான விக்ராந்த் தற்போது இறுதி கட்ட பரிசோதனை நிலையில் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஐந்து நாள் சோதனை ஓட்டத்தில் இந்த விமானம் தாங்கிய போர்க்கப்பலின் தரம் பரிசோதிக்கப்பட்டது. அடுத்தடுத்த தர பரிசோதனைகளில் இந்த கப்பல் வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் இதன் கடைசி கட்ட பணிகள் முடிந்துவிடும் என கப்பல்படை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இந்திய கடல் பாதுகாப்புக்கும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் இருந்து தற்காத்துக்கொள்ளவும், விமானத் தாக்குதல் நடத்தவும் இந்த கப்பல் பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE