எக்ஸ்குளுசிவ் செய்தி

வரைபடம் இருந்தால் தான் மணல்: புதிய விதிகள் நடைமுறைக்கு சாத்தியமா?

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை--தமிழக அரசு, ஆற்று மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், அவை நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில், ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மணல் விற்பனையில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்படும் என, தேர்தலின் போது தி.மு.க.,
வரைபடம், மணல்,புதிய விதிகள், சாத்தியமா?

சென்னை--தமிழக அரசு, ஆற்று மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், அவை நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில், ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மணல் விற்பனையில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்படும் என, தேர்தலின் போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது.அதன்படி, ஆட்சிக்கு வந்ததும் இதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் முறையிலான ஆற்று மணல் விற்பனை முடங்கியது. தற்போது, ஆற்று மணல் விற்பனைக்கான புதிய நடைமுறைகள் அடங்கிய அரசாணையை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு யூனிட் மணல் 1,000 ரூபாய் என்ற விலையில், பொது மக்களுக்கு ஆன்லைன் முறையில் வழங்கப்பட உள்ளது.
பொது மக்களுக்கு தனியாகவும், லாரி உரிமையாளர்களுக்கு தனியாகவும், நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதால், யார்டுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:நீர் வளத்துறையின் உத்தரவுப்படி, பொதுமக்கள் நேரடியாக ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து மணல் வாங்கலாம். மணல் எடுக்க வரும் வாகனத்தின் பதிவு விபரங்கள், கட்டட வரைபடம் போன்ற விபரங்களை அளிக்க வேண்டும்.இதில், வாகன விபரங்களை மட்டும், மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

வரைபடம் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கட்டடத்தின் மணல் தேவை முடிவு செய்யப்பட்டு, அந்த அளவில் மட்டுமே மணல் வழங்கும் நிலை ஏற்படும். இதனால், பொது மக்கள் பெயரில் யாரும் மணல் வாங்கி, கள்ள சந்தையில் விற்பது தடுக்கப்படும்.இந்த கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த, உரிய அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஒப்பந்தம் பெற கடும் போட்டிதமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, 16 குவாரிகளில் லாரிகளுக்கும்; 21 குவாரிகளில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் வழங்கப்பட உள்ளது.குவாரிகளில் இருந்து யார்டுகளுக்கு மணலை எடுத்து வர, தனியார் ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தப்படுவர்.இதில், 2005க்கு பின் அரசியல் பின்னணியுடன், பினாமிகள் இறங்குவது வெகுவாக அதிகரித்தது. அதனால் தான், மணல் விற்பனையில் பெருமளவில் முறைகேடுகளும் நடந்தன.

தற்போது அரசு அறிவித்து உள்ள நடைமுறைகள் அமலுக்கு வரும் போது, குவாரிகளில் இருந்து யார்டு களுக்கு மணலை எடுத்து வருவதற்கான அனுமதியை பெற, ஆறு ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில், அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஒப்பந்தம் பெறாமல் இருப்பதை, தமிழக அரசு உறுதி செய்தால் மட்டுமே, முறைகேடுகளை தடுக்க முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
10-ஜன-202213:13:04 IST Report Abuse
raja அது சரி... அது புதுசா வீடுகட்றவங்க வரைபடம் கொடுக்கலாம் பழைய வீட்டுக்கு மராமத்து வேலை செய்யிறவங்களுக்கு மணல் தேவை இருக்குமே அதுக்கு எந்த வரைபடத்தை கொடுக்கணும்... கேடுகெட்ட இந்த துக்ளக் பத்தி பேசுனா உடன்பிறப்புக்கள் ஒடனே நம்பள சங்கின்னு சொல்லுவானுவோ....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
10-ஜன-202213:09:42 IST Report Abuse
raja "இதில், அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஒப்பந்தம் பெறாமல் இருப்பதை, தமிழக அரசு உறுதி செய்தால் மட்டுமே, முறைகேடுகளை தடுக்க முடியும்.".....அதெப்படி விடியலின் உடன்பிறப்புக்கள் புறங்கை நக்கத்தானே இந்த அறிவிப்புகள்.....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-ஜன-202210:22:28 IST Report Abuse
duruvasar வேண்டாத அச்சம். நடப்பது விடியல் ஆட்சி. விஞ்ஞான முறையில் செயல்படுத்துபவர்கள் என அகில இந்தியாவில் அஃமார்க் சான்றிதழ் வைத்துள்ள ஒரே அரசியல் கட்சி திமுகதான். கனவில்கூட தயவுசெய்து இப்படி எதிர்மறையாக எண்ணாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X