சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அ.தி.மு.க., - ஐ.ஜே.கே., கொடுக்கும் பொங்கல் பரிசு!

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (1)
Advertisement
கடைக்கு வந்த நண்பர்களுக்கு, குளிருக்கு இதமாக, இஞ்சி டீ கொடுத்து வரவேற்றார், நாயர். ''பா.ம.க., நிர்வாகியின் கட்டுப்பாட்டுல தான், போலீஸ் ஸ்டேஷனே இருக்குதாம் பா...'' என முதல் தகவலை சொல்ல ஆரம்பித்தார், அன்வர்பாய்.இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''என்ன சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தர்மபுரி மாவட்டம், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு, 44 குக்கிராமங்கள் இருக்கு
டீ கடை பெஞ்ச்

கடைக்கு வந்த நண்பர்களுக்கு, குளிருக்கு இதமாக, இஞ்சி டீ கொடுத்து வரவேற்றார், நாயர். ''பா.ம.க., நிர்வாகியின் கட்டுப்பாட்டுல தான், போலீஸ் ஸ்டேஷனே இருக்குதாம் பா...'' என முதல் தகவலை சொல்ல ஆரம்பித்தார், அன்வர்பாய்.



இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''என்ன சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தர்மபுரி மாவட்டம், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு, 44 குக்கிராமங்கள் இருக்கு பா...

''போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற அடிதடி தகராறு முதல், புருஷன் - பொண்டாட்டி பிரச்னை வரை எல்லாத்தையும், 'தமிழ் கடவுள்' பெயருடைய, பா.ம.க., கவுன்சிலர் ஒருத்தர் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்யுறாராம் பா...

''இரு தரப்புக்கிட்டேயும் பணத்தை வாங்கி, போலீசாருக்கு பாதி கொடுத்துட்டு, மீதியை எடுத்துட்டு போறாராம் பா...

''பணம் பங்கு பிரிக்குறதுல மட்டும் அவர் ரொம்ப நியாயமா நடந்துக்குறாருன்னு, போலீசார் பெருமையா சொல்லுறாங்களாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''விதிமீறல் என்பதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாகிடுச்சுங்க...'' என்றபடியே அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன விஷயமுன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சமீபத்துல சேலம் மத்திய சிறையில ஒரு மணி நேரம் ஆய்வு செஞ்சாருங்க... அவருடன் எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் அவர்களின் உதவியாளர்களும் போனாங்க...

''அவங்களுடன் கலந்து, அரசு பதவியில் இல்லாத, தி.மு.க.,வினர், 20க்கும் மேற்பட்டோரும், அமைச்சருடன் சிறைக்குள் போயிருக்காங்க... போலீசார், சிறை அதிகாரிகள் யாரும், அவங்களை தடுக்கலையாமுங்க...

''அனுமதி பெறாமல்சிறைக்குள் போன தி.மு.க.,வினர், அங்கு என்ன செய்தனரோ என சலசலப்பு கிளம்பியிருக்குங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''இவ்வாளும் பொங்கல் பரிசு கொடுக்க போறாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''ரொம்ப நல்லாஇருக்கே... எந்த கட்சிக்காரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பகுதியில, அ.தி.மு.க., மற்றும் பாரி வேந்தரின், ஐ.ஜே.கே., நிர்வாகிகள் ரெண்டு பேர், போட்டி போட்டு, வாக்காளர்களுக்கு இலவசமா பொருட்களை வாரி வழங்குதாவ வே...

''ஏற்கனவே ஒரு மூட்டை அரிசி, முட்டை, தண்ணீர் கேன், குடத்தை இலவசமாக வழங்கினாவ வே...''இப்போ அடுத்த கட்டமாக, ஒரு கடையோட ஒப்பந்தம் போட்டுருக்காவ வே...

''அதாவது வாக்காளர்களுக்கு, 'டோக்கன்' கொடுத்துருக்காவ... அவங்க, அந்த கடைக்கு போய், டோக்கனை கொடுத்தா பச்சரிசி, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெல்லம், பானை, கரும்புன்னு பொங்கல் பரிசு பொருட்கள் தருவாங்களாம் வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''அட, தமிழக அரசு கூட பொங்கல் வைக்க, பானை கொடுக்கலையே ஓய்...'' என குப்பண்ணா கூற, நண்பர்கள் சிரித்தபடியே நடையைக் கட்டினர். நாயர், அடுத்த வாடிக்கையாளரை எதிர்பார்த்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஜன-202219:47:19 IST Report Abuse
D.Ambujavalli ஓட்டுப்போட்டு கொண்டுவந்தால் ஓட்டைப் பானையை தான் தலையில் கவிழ்த்துக்கொள்ள வேண்டும் என்று இப்போதே சிம்பாலிக்காக கூறுகிறார்கள் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X