புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நம் ராணுவ வீரர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
![]()
|
ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் எல்லை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எனினும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் நம் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவது அனைவரையும் பெருமிதப்பட வைக்கிறது.கிழக்கு லடாக் எல்லையில் மிகக் கடுமையான பனிப் பொழிவு மற்றும் காற்றுக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாக்கும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' நேற்று முன்தினம் வெளியானது.
![]()
|
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ராணுவத்தினர் உதவி புரிந்துள்ளனர். ராணுவத்தின், 'சினார் கார்ப்ஸ்' படைப் பிரிவினர், பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணை, ஸ்ட்ரெச்சரில் வைத்து பனிப்பொழிவுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதேபோல், காயமடைந்த ராணுவ வீரரை, ஹெலிகாப்டரில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.