ஒப்பிட்டுப் பார்ப்பதில் உள்ள அமைதியற்ற நிலை, விட்டுக் கொடுப்பதில் உள்ள நன்மைகள் பற்றி கூறுகிறார், சுவாமி சுகபோதானந்தா: ஆராய்ச்சியாளர் ஒருவர், சிறு வேலைகளை செய்ய, இரண்டு குரங்குகளை பழக்கி வைத்திருந்தார். கூண்டில் இருக்கும் சிறு கற்களை எடுத்து வந்து, ஆராய்ச்சியாளரிடம் கொடுத்தால், கொடுக்கும் குரங்குக்கு ஒரு வாழைப்பழத் துண்டை பரிசாக கொடுப்பார்.ஒரு நாள் ஒரு குரங்கு, ஆராய்ச்சியாளர் சொன்னபடி, ஒரு கல்லை எடுத்து வந்து கொடுத்தது. அதை மகிழ்விப்பதற்காக, ஒரு பெரிய வாழைப்பழத் துண்டை அதனிடம் கொடுத்தார்; அதுவும் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டது.கொஞ்ச நேரம் கழித்து, இன்னொரு கல்லை எடுத்து வர, இன்னொரு குரங்குக்கு உத்தரவிட்டார்.
அந்த குரங்கும் எடுத்து வந்து கொடுத்து விட்டு, பழத்துண்டுக்காக காத்திருந்தது. முதல் குரங்குக்கு கொடுத்ததை விட, சிறிய துண்டு பழத்தை அந்த குரங்கிடம் கொடுத்தார். அதுவும் எதையும் நினைக்காமல் வாங்கிச் சாப்பிட்டது.இப்படியே தினமும் நடந்தது. ஒரு நாள், சிறிய பழத்துண்டை வாங்கிச் சாப்பிடும் குரங்கு, 'நமக்கு ஏன் எப்போதும் சிறிய துண்டை ஆராய்ச்சியாளர் தருகிறார்' என சிந்திக்கத் துவங்கியது. அன்றும், வழக்கம் போல அவர் சொன்ன செயலை செய்து முடித்த போது, அவர் கொடுத்த சிறிய துண்டு பழத்தை சாப்பிட அடம் பிடித்து, அந்த பழத்தை விசிறி அடித்து தகராறு செய்தது.தனக்கு கிடைத்தது போதும் என இருந்தது வரை, அந்த குரங்கிடம் அமைதி இருந்தது. ஒப்பிட்டு பார்த்த பிறகு, அந்த குரங்கின் மனம் போன போக்கால், அது அமைதி இழந்ததை கவனித்தீர்களா... அதுபோலத் தான் மனிதர்களும், மனித மனமும்.
'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தை அனைவரும் அறிந்திருப்பர். நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று; பல கோடீஸ்வரர்களை உருவாக்கியது. அதை உருவாக்கியது, நாராயணமூர்த்தி. அவரின் மனைவி பெயர் சுதா. இருவரும் காதல் திருமணம் தான் செயதவர்கள். இருவரும் காதலித்தது, அவர்கள் முதலில் துவக்கிய சிறிய நிறுவனம் அமைந்திருந்த பகுதியில் இருந்த ஒரு டீ கடையில் தான்.
பெரிய அளவில் நிறுவனம் வளர்ந்த போதும், அதன் நிர்வாக குழுவில் சுதாவும் இருந்தார்; நாராயணமூர்த்தியும் இருந்தார். ஒரு கட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், நிர்வாக குழுவில் இடம்பெறக் கூடாது என்ற முடிவுக்கு அந்த நிறுவனம் வந்தது. அதை அறிந்த சுதா, வெளியேறினார்.அப்போது அவர், 'நீங்கள் போட்ட விதையிலிருந்து இந்த மரம் வளர்ந்துள்ளது. இதில் நீங்கள் இருப்பது தான் சரியாக இருக்கும்' என்று கூறி வெளியேறி விட்டார். இப்படி விட்டுக் கொடுப்பதில் தான் இருக்கிறது அன்பு, காதல், உயர்வு, நிம்மதி, அமைதி எல்லாம்!
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement