புதுடில்லி-'முப்படை புதிய தலைமை தளபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் முடிய தாமதம் ஆகும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
![]()
|
ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதியை நியமிப்பது குறித்து 2019ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தார்.
இதையடுத்து புதிய முப்படை தலைமை தளபதியை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.ஆயுதப்படையில் 'கமாண்டிங் ஆபீசர்' அல்லது அதற்கு இணையான அந்தஸ்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு தகுதி பெறுகின்றனர். இந்த பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 65.தற்போது ராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, 61, அப்பதவியில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிபின் ராவத் மறைவுக்குப் பின் முப்படை தளபதிகளின் குழுவுக்கு தலைவராக நரவானே பொறுப்பேற்றார்.
![]()
|