பெரிய மீசை வைத்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

Added : ஜன 10, 2022 | கருத்துகள் (16)
Advertisement
போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் சைக்கிள் கைப்பிடியான, 'ஹேண்டில்பார்' போல், பெரிய மீசை வளர்த்த போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் காவல் துறையில் மோசடி தடுப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றியவர் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் அதிக அளவில் முடி வளர்த்து,
 பெரிய மீசை வைத்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் சைக்கிள் கைப்பிடியான, 'ஹேண்டில்பார்' போல், பெரிய மீசை வளர்த்த போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் காவல் துறையில் மோசடி தடுப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றியவர் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் அதிக அளவில் முடி வளர்த்து, கடா மீசை வைத்திருந்தார். சீருடை பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றை ஒழுங்குப் படுத்தும்படி உயர் அதிகாரிகள் உத்தர விட்டனர். ஆனாலும் அவர் மீசையின் அளவை குறைக்காமல் பிடிவாதம் செய்து வந்தார். இதையடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ''மீசை, என் சுயமரியாதை சம்பந்தப்பட்டது என்பதால் சஸ்பெண்ட் ஆனாலும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்,'' என, ராகேஷ் ராணா கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஜன-202204:55:12 IST Report Abuse
meenakshisundaram மீசை வளர்த்துவிட்டு இப்போ தெனாலி ராமன் போல கருத்து சொல்றது தப்பு. வேலைலே சேரும்போது எல்லாவற்றையும் மளிச்சு விட்டுட்டு இப்போ விதண்டாவாதம் பேசுவது முறையா ?அப்போ வேலை வேண்டடான்னு எழுதுக்கொடு
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-ஜன-202213:13:39 IST Report Abuse
Krishnamurthy Venkatesan சீருடை பணியில் ஒரு குறிப்பிட்ட பணியினர் மீசை வளர்க்க அனுமதி உண்டு. முறையாக அனுமதி பெற வேண்டும். இதற்க்கு அல்லோவான்ஸ் கூட உண்டு என கேள்விப்பட்டிருக்கேன்.
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
10-ஜன-202212:23:22 IST Report Abuse
yavarum kelir ஏர் போர்ஸ் விங் கமாண்டர் அபிநந்தன் இந்த மாதிரி மீசை வெச்சு கொண்டதாக ஞாபகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X