மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்., கட்சியினர் பாதயாத்திரை| Dinamalar

மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்., கட்சியினர் பாதயாத்திரை

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (16) | |
ராம்நகர்-காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பாதயாத்திரை நடத்தினர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தி நேற்று பாதயாத்திரை நடத்தியது. ராம்நகர் கனகபுராவில் இந்த

ராம்நகர்-காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பாதயாத்திரை நடத்தினர்.



latest tamil news


கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தி நேற்று பாதயாத்திரை நடத்தியது. ராம்நகர் கனகபுராவில் இந்த பாதயாத்திரையை ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே துவக்கி வைத்தார்.


latest tamil news


முன்னதாக காவிரி ஆற்றுக்கு கர்நாடக மாநில காங்., தலைவர் சிவகுமார் பூஜை செய்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் இதில் பங்கேற்றனர். இவர்களை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா பாதயாத்திரையில் சிறிது துாரம் நடந்தார். பின் தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்வடைந்து அங்கிருந்து புறப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருப்பதாக காங்., கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X