உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
அ.கணேசன், விளாத்திகுளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரசாரம் செய்தால், அது உண்மையாகி விடும்' என்பது, சர்வாதிகாரி ஹிட்லரின் வலது கரம் கோயபல்சின் அணுகுமுறை. அதைத் தான் அடிபிழறாமல், தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு கடைப்பிடித்து வருகிறது.
மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வை ரத்து செய்யவும் முடியாது; தனி ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்கவும் இயலாது என்பது, தி.மு.க., உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.ஆனால், 'தீர்மானம்' என்ற ஒற்றை வார்த்தையை முன்னிறுத்தி, அரசியல் கட்சிகள் நடத்தும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது; அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளார் கவர்னர்.இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண, தமிழக எம்.பி.,க்கள் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷாவை சந்தித்து பேச முயற்சித்தனர்.
அதற்கு அவர் அனுமதி அளிக்காததால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன.இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும்,அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கவும், அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை, தமிழக அரசு கூட்டியது.இது தவிர, 'பல்கலை துணைவேந்தரை, மாநில அரசே நியமிப்பது தொடர்பாக, சட்டசபையில் மார்ச்சில் தீர்மானம் நிறைவேற்றப்படும்' என்றும், முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது...அதாவது, சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அதற்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டுமா?
![]()
|
உதாரணமாக, 'பிரதமரை பதவி நீக்கம்செய்கிறோம்' என, ஏதோ ஒரு மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், உடனே அவர் விலகி விட வேண்டுமா?ஏதோ ஒரு ஊராட்சியில், 'சட்டசபையை கலைக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினால், உடனே ஆட்சியில் இருந்து தி.மு.க., வெளியேறி விடுமா?இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது போன்ற தீர்மானம் என்ற, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை வழங்கி, மக்களை ஏமாற்றுவர்?இது போன்ற, 'நீட் தேர்வு விலக்கு' என்ற, 'புருடா'க்களுக்கு நிரந்தர முடிவு கட்ட, மத்திய அரசு களமிறங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அனைத்தையும், அரசுடைமையாக்க மாற்ற வேண்டும் அல்லது தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒரு முடிவை, மத்திய அரசு துணிந்து எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE