மூன்று ஆண்டாக சிறை வாசம் அனுபவித்த சவுதி இளவரசி விடுதலை

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
துபாய் : சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத். 'அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும்' என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.கடந்த 2019 மார்ச்சில் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து செல்வதற்காக விமான நிலையத்துக்கு தன் மகளுடன் பாஸ்மா சென்றார். அப்போது சவுதி
Saudi princess, released, jail

துபாய் : சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத். 'அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும்' என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

கடந்த 2019 மார்ச்சில் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து செல்வதற்காக விமான நிலையத்துக்கு தன் மகளுடன் பாஸ்மா சென்றார். அப்போது சவுதி அரசு அவரை கைது செய்தது. ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் விதிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.


latest tamil news



சிறையில் இருந்த பாஸ்மா தன் உடல் நலனைக் கருத்தில் வைத்து தன்னை விடுவிக்கும்படி சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மூன்று ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்மா மற்றும் அவரது மகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-ஜன-202206:20:06 IST Report Abuse
NicoleThomson பெண்களின் நிலை இங்குள்ள மதத்தை நினைத்து பார்க்கிறேன் மற்றும் பாரசீக மதத்தில் இருப்பதை நினைத்து கம்பேர் பண்ணுகிறேன் , கேரளத்தில் இருந்து ஆப்கான் சென்று விருந்து படைத்த பெண்களையும் பாசிமாவையும் கம்பேர் பண்ணினாள் கஷ்டம் தான் மிஞ்சுது . என்ன செய்வது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202205:22:32 IST Report Abuse
J.V. Iyer சவுதி அரேபியாவில் சீர்திருத்தங்கள் நடக்கும்போது, இதை ஆதரித்த இவரை வெளியே விடுவதுதானே முறை? இவருக்கு நன்றி சொல்லுங்கள்.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
10-ஜன-202210:32:16 IST Report Abuse
Apposthalan samlin ஐரோப்பா வில் குடியேறுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X