புதுடில்லி : டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகளை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கியதும் ஏசி,ப்ரிட்ஜ் விலை உயர்ந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து இம்மாதத்தின் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதத்திற்குள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மேலும் 5 முதல் 10 சதவீதம் உயரும் என நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வீட்டு உபயோக பொருட்களின் விலை மார்ச் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 5 முதல் 7 விழுக்காடு உயரும் என நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE