‛ஒமைக்ரானை' தொடர்கிறது புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்'

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (10)
Advertisement
நிகோசியா: உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின்

நிகோசியா: உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.latest tamil news


சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அதில் கோவிட் 19, டெல்டா என்று உருமாற்றம் அடைந்தது


இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்தன. தற்போது 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்' என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது.latest tamil news


இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர். இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஜன-202218:14:28 IST Report Abuse
Bhaskaran Aduththu oru oosi thayaar .marunthukampenigal kaattil kodaimalai
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
10-ஜன-202211:18:50 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் இப்பவும் சொல்றேன்... ஆதிகால மனிதர்கள் மாதிரி உலக மனிதர்களின் நடவடிக்கைகள் அமைந்தால்... இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்திலிருந்து தப்பிக்கலாம்... நீங்க பாட்டுக்கு புதுசா பேர் வச்சி... அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கலாம்... அது புதுசா, புதுசா உருமாறி வந்துட்டே இருக்குமே... உங்களுக்கு வேற வேலையே செய்ய முடியாதே...? நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது, எச்சரிப்பது, சொல்வது... “கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக (செல்போன் போன்ற தகவல் தொழில்நுட்ப நடைமுறைக்கு வந்தது முதல்), தனது ஆணவத்தால், அகந்தையால், தலைக்கணத்தால்... இயற்கையை தொடர்ந்து இம்சை செய்ததால், கொடுமை செய்ததால், புறக்கணித்ததால், அது தன் வேலையை காட்ட துவங்கி இருக்கிறது... மனிதப் பதர்கள் ஒழுங்கா வெள்ளைக் கொடி காட்டி...இயற்கையிடம் சரணடைந்து... ஆதிகாலம் மாதிரி நடந்துக்குங்க.. உங்க உயிர் உங்க உடலில் தங்கணும்னா...?
Rate this:
10-ஜன-202215:15:25 IST Report Abuse
ஆரூர் ரங்உங்க டிரெஸ் இலைதழை தானே? வீட்டில மின்சார கனெக். ஷன்😛 இல்லையே? அப்போ சரி...
Rate this:
Cancel
10-ஜன-202210:38:38 IST Report Abuse
அப்புசாமி . …
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X