நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.3,000 கோடி தேவை: ஆய்வுக்குழு பரிந்துரை

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (24)
Advertisement
சென்னை: சென்னையில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தமிழக அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது.மழை நீர் கால்வாய் கட்டுமானத்தை, பல ஆண்டுகளாக பெய்த மழையின் அளவுடன், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அமைக்க வேண்டும் எனவும், இக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, இப்பணிகளைசென்னை: சென்னையில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தமிழக அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது.மழை நீர் கால்வாய் கட்டுமானத்தை, பல ஆண்டுகளாக பெய்த மழையின் அளவுடன், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அமைக்க வேண்டும் எனவும், இக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, இப்பணிகளை மேற்கொள்ள, 3,000 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிய வந்துள்ளது.latest tamil newsசென்னையில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய், கேப்டன் - காட்டன் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு நீர்வழித்தடங்கள் உள்ளன. இவற்றின் வழியாக மழைக்காலங்களில் வெள்ளநீர் வெளியேறி, கடலில் கலக்கிறது.

பருவமழைக்கு முன்பாக, இந்த நீர்வழித்தடங்களில், துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஒதுக்கப்படும் நிதி குறைவாக உள்ளதாகக் கூறி, துார்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவமழை துவங்கியது. நவம்பர் மாதம் இரண்டு தவணையாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், மாம்பலம், தி.நகர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், புளியந்தோப்பு, பெரியார் நகர், மணலிபு துநகர், சடையங்குப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் அதிகளவில் தேங்கியது.


latest tamil newsஇதையடுத்து, சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. சென்னையில், 1,100 இடங்களில் மோட்டார் பம்ப் வாயிலாக, மழைநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ச்சியாக மேற்கொண்ட பணியாலும், மழை ஓய்ந்ததாலும், வெள்ளம் வடிந்தது. சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்கு ஆய்வு மேற்கொள்வதற்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. நீரியல் வல்லுனர் ஜனகராஜன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றனர்.

இக்குழுவினர், சமீபத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து, சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு பரிந்துரை செய்து, முதற்கட்ட அறிக்கையை வழங்கினர். அதன்படி, சென்னையில் பல மண்டலங்களில் தற்போதுள்ள மழை நீர் கால்வாய்களில் போதிய நீர் கடத்தும் திறன் இல்லை என தெரியவந்து உள்ளது.latest tamil newsபல கால்வாய்கள் முறையாக, பெரிய நீர்வழித்தடங்களுடன் இணைக்கப்படவில்லை. மழை நீர் கால்வாய்களில், திடக்கழிவுகள் அடைத்துக் கொள்வதால், நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மழை நீர் கால்வாய் கட்டுமானத்தை, பல ஆண்டுகளாக பெய்த மழையின் அளவுடன், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அமைக்க வேண்டும் என, இக்குழுவினர் பரிந்துரை வழங்கி உள்ளனர்.

இதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள பெரிய நீர்வழித்தடங்களின் முகத்துவாரங்களின் இரண்டு புறங்களிலும், கான்கிரீட் கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என, பல்வேறு பரிந்துரைகளை வழங்கிஉள்ளனர்.

முதற்கட்டமாக இக்குழுவினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை, பணிகளாக மேற்கொள்வதற்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என தெரிய வந்துள்ளது.நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, இப்பணிகளை குழுவின் மேற்பார்வையில் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, இப்பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு நிதி ஒதுக்கப்படஉள்ளதாக தெரிகிறது. மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்து, நிதி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrakumar - tiruppur,இந்தியா
10-ஜன-202215:34:28 IST Report Abuse
chandrakumar சிங்கார சென்னை வெள்ள பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட 3000 கோடியில் திட்டம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளாக போட்ட திட்டங்கள் என்ன ஆனது? ஆக இதுவரை திட்டமிட தெரியாத திராவிட பரம்பரை ஆண்டு வந்ததை புதிதாக திட்டமிடுகிறோம் என்று அவர்களாகவே ஏற்றுக்கொள்கிறார்களா? என்ன பெரிய ஏப்பமாக போட்டுவிட்டு போய்விடுவார்கள் என்ன சென்னையில் வாழ நன்றாக நீச்சல் தெரிந்தால் நல்லது திராவிடம் ஆளும்வரை
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
10-ஜன-202214:13:53 IST Report Abuse
Duruvesan ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வாழ்த்துக்கள்
Rate this:
Gopal - Chennai,இந்தியா
10-ஜன-202214:31:32 IST Report Abuse
Gopalசென்னை வெள்ளநீர் வடிகாலுக்கு பல ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம்...இனிமேல் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்று சொன்ன அடிப்பொடி அடித்த கொள்ளை எத்தனை ஆயிரம் கோடி? வேலுமணி பயல் எத்தனை ஆயிரம் கோடி அடிபொடிக்கு கொடுத்தான்?...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஜன-202212:55:12 IST Report Abuse
Bhaskaran ஆறிலொரு பங்கு செலவு மற்றது ஸ்வாஹா
Rate this:
Gopal - Chennai,இந்தியா
10-ஜன-202214:32:17 IST Report Abuse
Gopalமொத்தத்தையும் அடிப்பொடி கும்பல் செலவு செய்ததாக கணக்கு எழுதி அடித்து சுருட்டிவிட்டு போயிருக்கான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X