தடுப்பூசி பணியை வேகப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட அளவில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.விழிப்புணர்வுகொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை நாடு முழுதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி
PM Modi, Modi, India Fights Corona

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட அளவில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.



விழிப்புணர்வு


கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை நாடு முழுதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுகாதார மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் புதிய வகைகளில் உருமாறி வருவதால் பரிசோதனை, தடுப்பூசியிலும் மாற்றங்கள் செய்வது குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்த பிரதமர் வலியுறுத்தினார்.


latest tamil news


முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை தற்போதைய புதிய இயல்பாக மாறியுள்ளன. இவையே, வைரஸ் பரவல் வேகத்தைதடுக்கும். மேலும், தடுப்பூசியும் முக்கிய கவசமாக செயல்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன், அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்பஎடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாக பிரதமர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பில் முக்கிய பங்காற்றும் முன்களப் பணியாளர்களுக்கு, 'முன்னெச்சரிக்கை டோஸ்' தடுப்பூசி வழங்குவதை ஒரு இயக்கமாக செயல்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



ஏழே நாட்களில்


நாடு முழுதும், 15 - 18 வயதுடைய சிறார்களில் 31 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.



இன்று ஆலோசனை


இதற்கிடையே, வைரஸ் பரவல் குறித்து மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
10-ஜன-202217:06:42 IST Report Abuse
INDIAN Kumar இந்தியா முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம்
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
10-ஜன-202215:15:52 IST Report Abuse
Sandru தவறான தலைப்பு.
Rate this:
Cancel
10-ஜன-202210:34:09 IST Report Abuse
அப்புசாமி தடுப்பூசி பணி நல்லா வேகமாத்தான் போய்க்கிட்டிருக்குது. இனிமே, ஒரே ஆளுக்கு காலைல முதல் டோஸ், மத்தியானம் இரண்டாம் டோஸ், மாலையில் பூஸ்டர் போட்டுரலாம். உலக சாதனைன்னு பெருமிதப் படலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X