ஓடி ஒளிந்த பழங்குடியினரை தேடிப் பிடித்து தடுப்பூசி!| Dinamalar

ஓடி ஒளிந்த பழங்குடியினரை தேடிப் பிடித்து தடுப்பூசி!

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (6) | |
நீலகிரி: பந்தலுார் அருகே கிளன்ராக் வனத்தில், தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளிந்த பழங்குடியின மக்களை தேடி பிடித்து, தடுப்பூசி போடும் பணி நடந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் இருந்து 9 கி.மீ.,யில் கிளன்ராக் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 11 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத கரடு, முரடான சாலை வழியாக மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

நீலகிரி: பந்தலுார் அருகே கிளன்ராக் வனத்தில், தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளிந்த பழங்குடியின மக்களை தேடி பிடித்து, தடுப்பூசி போடும் பணி நடந்தது.



latest tamil news



நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் இருந்து 9 கி.மீ.,யில் கிளன்ராக் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 11 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத கரடு, முரடான சாலை வழியாக மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்காக, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் குழுவினர், பகுதி துாரம் ஜீப்பிலும், மீதமுள்ள துாரம் வனப்பகுதி வழியாக நடந்தும் சென்றனர்.


latest tamil news



இதை பார்த்த பழங்குடியினர் பலர் ஓடி ஒளிந்து கொண்டனர். பின், எஸ்டேட் காவலர்கள் உதவியுடன் அவர்களை தேடி பிடித்து, தடுப்பூசி போடும் பணி நடந்தது. தடுப்பூசியின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X