கஜகஸ்தான் கலவரம் பலி 164 ஆக உயர்வு

Added : ஜன 10, 2022 | |
Advertisement
மாஸ்கோ : கஜகஸ்தானில் கலவரம் மற்றும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கடந்த வாரம் பெரும் கலவரம் வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.கலவரத்தில் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் மற்றும்
 கஜகஸ்தான் கலவரம் பலி 164 ஆக உயர்வு

மாஸ்கோ : கஜகஸ்தானில் கலவரம் மற்றும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.



மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கடந்த வாரம் பெரும் கலவரம் வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.கலவரத்தில் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியானது. தொடர்ந்து நீடித்த கலவரத்தில் 164 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தற்போது கூறி உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் மட்டும் நான்கு குழந்தைகள் உட்பட 103 பேர் பலியாகி உள்ளதாக தெரிகிறது.இதற்கிடையே, கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆக்கிரமித்த கட்டடங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X