கோவை: முழு ஊரடங்கு அமலான அன்று இரவு, வழக்கமாக இயக்கப்படும் அரசு டவுன்பஸ்கள் அறிவிப்பு ஏதுமின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதை சாதகமாக்கிக்கொண்ட ஆட்டோ டிரைவர்கள், கொள்ளை லாபம் அடித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் வழக்கமாக இயக்கப்படும் டவுன் பஸ்கள் அனைத்தும், முன்னதாகவே ஷெட்டிற்கு திரும்பின.
இதனால் இரவு 8:00 மணி முதலே, பயணிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.இதற்கான அறிவிப்புகளை, அரசு போக்குவரத்துக்கழகம் முன்னதாகவே மக்களுக்கு தெரிவிக்கவில்லை.
![]()
|
இதனால் பஸ் வரும் என்று காந்திபுரம், ரயில்நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், உக்கடம் ஆகிய பகுதிகளில் வீடு திரும்ப காத்திருந்த ஏராளமான பொதுமக்கள், பஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.
ஆனால் காந்திபுரத்திலிருந்து வெள்ளலுார் வரை சென்ற 55 எண் பஸ், ரயில் நிலையத்திலிருந்து கணுவாய் வரை சென்ற 11ம் எண் பஸ், சவுரிபாளையத்திலிருந்து தீத்திபாளையம் வரை எஸ் 3 எண் பஸ், போத்தனுாரிலிருந்து துடியலுார் வரை சென்ற 4 எண் பஸ், ஒண்டிப்புதுாரிலிருந்து வடவள்ளி வரை சென்ற 1 சி ஆகிய தனியார் பஸ்கள் மட்டும் அதிக பஸ் பயணிகளை சமூக இடைவெளி விடாமல் ஏற்றிச்சென்றது.
![]()
|
உதாரணமாக, ஆட்டோக்களில் மாதம்பட்டி செல்ல, 800 ரூபாய் வரை வசூலித்தனர். இக்கட்டணத்தை தனி நபர் செலுத்த முடியாததால், ஒரு ஆட்டோவில் ஆறுபேர் பங்கிட்டு சென்றனர். இப்படி செல்வபுரம், தெலுங்குபாளையம், பேரூர், காளம்பாளையம் வரை இளம் பெண்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்த பயணித்தனர். இனி வரும் காலங்களிலாவது, அரசு போக்குவரத்துக்கழகம் பொறுப்பில்லாமல் இப்படி பொதுமக்களை நடுரோட்டில் தவிக்க விடக்கூடாது.
என்ன செய்திருக்க வேண்டும்?
ஊரடங்கு நாட்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை, சற்று முன்னதாகவே வீட்டிற்கு அனுப்பியிருக்கலாம். அரசு போக்குவரத்துக்கழகம் மற்ற வழித்தடங்களில் பஸ்களை இயக்கியதை போல, சிறுவாணி சாலையிலும் சில பஸ்களை ஊரடங்கு நேரத்துக்கு முன்னதாக இயக்கியிருக்கலாம். அல்லது முன்னதாகவே பஸ்கள் இயக்கப்படாதது குறித்த அறிவிப்பை, மக்களுக்கு ஊடக தளம் வாயிலாக தெரிவித்திருக்கலாம். பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும்வரை தவிப்புக்கு ஆளானதை தவிர்த்திருக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE