ரூ.2க்கு சிக்கனம் பார்த்தால் ரூ.2 லட்சம் 'பழுத்திடும்'

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
அவிநாசி: முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அவிநாசி போக்குவரத்து போலீசார் வைத்துள்ள விழிப்புணர்வு பேனர், மக்களை சிந்திக்க வைக்கிறது.தொற்றில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிவது அவசியம் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் பலரும், முக கவசம் அணிவதை தவிர்க்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும்
Mask, Awareness, Tamilnadu, மாஸ்க், முகக்கவசம், விழிப்புணர்வு

அவிநாசி: முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அவிநாசி போக்குவரத்து போலீசார் வைத்துள்ள விழிப்புணர்வு பேனர், மக்களை சிந்திக்க வைக்கிறது.

தொற்றில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிவது அவசியம் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் பலரும், முக கவசம் அணிவதை தவிர்க்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார், 100, 200 ரூபாய் என அபராதம் வசூலிக்கின்றனர்.


latest tamil news



திருப்பூர் மாவட்டம், அவிநாசி போக்குவரத்து போலீசார் சார்பில், மக்கள் அதிகம் கூடும் பிரதான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனரில்,'2 ரூபாய்க்கு முக கவசம் அணிந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதா; முக கவசம் அணியாமல், 200 ரூபாய் அரசுக்கு அபராதமாக செலுத்துவதா; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், 2 லட்சம் ரூபாய் வரை செலவழிப்பதா' என சிந்திக்க துாண்டும் வகையில், பேனரில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N T Aathav - Virudhunagar,இந்தியா
10-ஜன-202219:36:22 IST Report Abuse
N T Aathav 2 ரூபாய்க்கு முக கவசம் (Triple layer) கிடைத்தால் , எனக்கு 1 கோடி முக கவசம் கொடுக்கவும். (ஆனால், 99% முக கவசத்தை ஐந்து நிமிடங்களுக்கு மேல் சரியாக அணிவதில்லை)
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஜன-202219:21:12 IST Report Abuse
D.Ambujavalli சரி, இரண்டை இருபது என்றே வைத்துக்கொண்டாலும் போயிற்று கருத்தை எவ்வளவு அழகாக, மனதில் பதியும்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அதைப்பாராட்டுவோம்
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
10-ஜன-202212:12:41 IST Report Abuse
தமிழன் மாஸ்க் போட்டால் கொரோனா பரவல் கொறையுமே தவிர நமக்கு வராதுன்னு சொல்ல முடியாது. அதே மாதிரி பிரைவேட் ஆஸ்பத்திரிகாரன் ரெண்டு லட்சமா கேக்குறான்? அவன் அஞ்சு லட்சத்துக்கு கம்மியா பில் போட மாட்டான். உசிரு கூட கியாரண்டி கெடயாது. தமிழ்நாடு அரசு ஒன்னும் செய்யாது, அதான் ரெண்டாம் அலையில பாத்தோமெ? அவிங்களுக்கு சென்னை மட்டும் தான் நாடு. நீங்க வராம பாத்துக்கோங்க மக்கா. அவ்வளவுதான் சொல்றதுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X