அவிநாசி: முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அவிநாசி போக்குவரத்து போலீசார் வைத்துள்ள விழிப்புணர்வு பேனர், மக்களை சிந்திக்க வைக்கிறது.
தொற்றில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிவது அவசியம் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் பலரும், முக கவசம் அணிவதை தவிர்க்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார், 100, 200 ரூபாய் என அபராதம் வசூலிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி போக்குவரத்து போலீசார் சார்பில், மக்கள் அதிகம் கூடும் பிரதான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனரில்,'2 ரூபாய்க்கு முக கவசம் அணிந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதா; முக கவசம் அணியாமல், 200 ரூபாய் அரசுக்கு அபராதமாக செலுத்துவதா; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், 2 லட்சம் ரூபாய் வரை செலவழிப்பதா' என சிந்திக்க துாண்டும் வகையில், பேனரில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE