கோவை: தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவை கைவிட்டு, வரும் ஆண்டில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற உதவியாக, நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
![]()
|
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினால், சமூக நீதி பாதிக்கப்படுவதாக ஆளும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. அதில் உண்மை இல்லை. சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு சரியான முறையில் அமல்படுத்தப்படுவதுதான்.
நீட் தேர்வினால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதனால் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்குரிய மருத்துவ இடங்களை பெற்று வருகின்றனர்.
நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக நீட் தேர்வு எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். அதில் உண்மை இல்லை. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட புதிதில், ஒரு சில ஆண்டுகள் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான்.
![]()
|
ஆங்கிலம், இந்தி மட்டுமே தேர்வு மொழியாக இருந்தது, 12 ஆண்டுகளாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.மத்திய அரசு, நீட் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என, வாய்ப்பு வழங்கி பிறகு, கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, நீட்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மத்திய பா.ஜ., அரசின் செயல் திட்டம் அல்ல. இது தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.எனவே, தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவை கைவிட்டு, வரும் ஆண்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற, உடனடியாக நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும். அப்போதுதான் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement