விழுப்புரம்: பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த 11ம் வகுப்பு மாணவியை பெரியம்மா மகன், 80 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி தாய், தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது மாணவியின் வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்தனர்.

அப்போது மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உறவினர்கள் அந்த மாணவியிடம் விசாரித்தனர். அப்போது, மாணவியின் பெரியம்மா மகன் மோகன் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (80), இளையராஜா (28) ஆகியோர் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அடிக்கடி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதில் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE