புதுடில்லி: வெறுப்பு அரசியலை போக்க கிடைத்த வாய்ப்பு என விரைவில் நடைபெற உள்ள பல்வேறு மாநில தேர்தல்கள் குறித்து ராகுல் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
விரைவில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் தற்போது இந்திய தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராகுல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபைத் தேர்தல் வெறுப்பு அரசியலை போக்கும் ஓர் அரிய வாய்ப்பு என்று அவர் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வை தோற்கடிக்க முயற்சி மேற்கொள்கிறது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த கால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE