சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 10, 2022
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் பேட்டி: தமிழக அரசின், 'நீட்' மசோதாவை கவர்னர், நான்கு மாதங்களாக பரிசீலனையில் வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவரை இரண்டு முறை சந்தித்து, ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். எனினும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை; கவர்னரின் செயல்கள் கண்டனத்திற்குரியவை.'ஆட்டுக்குத் தாடி, ரப்பர் ஸ்டாம்ப்' என்றெல்லாம், கவர்னர் பற்றி

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் பேட்டி: தமிழக அரசின், 'நீட்' மசோதாவை கவர்னர், நான்கு மாதங்களாக பரிசீலனையில் வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவரை இரண்டு முறை சந்தித்து, ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். எனினும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை; கவர்னரின் செயல்கள் கண்டனத்திற்குரியவை.'ஆட்டுக்குத் தாடி, ரப்பர் ஸ்டாம்ப்' என்றெல்லாம், கவர்னர் பற்றி உங்கள் கூட்டணி கட்சியினர் கிண்டலாக சொல்கின்றனர்... பிறகு ஏன், அவரின் ஒப்புதலுக்காக ஏங்குகிறீர்கள்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் துறை அமைச்சர் ராஜு பேட்டி: பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில், அ.தி.மு.க.,வினர் பதவிகளில் இருக்கின்றனர் என்பதால் தான், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் குறைப்பு மசோதாவை, தி.மு.க., அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.அ.தி.மு.க.,வினரிடம் சுறுசுறுப்பு பத்தாது... தி.மு.க.,வாக இருந்திருந்தால், இந்நேரம் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் போன்றோர் சுப்ரீம் கோர்ட் சென்று, தடை வாங்கி இருப்பர்!


தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் தங்க தமிழ்செல்வன் பேட்டி
: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின், எம்.எல்.ஏ.,வாக சிறப்பாக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் சேவை, தமிழகம் முழுக்க கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் சிலர், அவரை அமைச்சராக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.உதயநிதியின் சேவை, தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் கிடைக்க, அவரை பிரதமராக்கி விடலாமே... செய்வரா?


தமிழக காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை
: 'நீட்'டுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கும்போது, பா.ஜ., மட்டும் நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் மூலம், பா.ஜ., தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழக மண்ணில் ஒருபோதும், தமிழர் விரோத பா.ஜ., வேறுான்ற அனுமதிக்கக்கூடாது.கேரளாவில், நீட் வேண்டும் என சொல்லும் காங்., தமிழகத்தில் வேண்டாம் என சொல்கிறது. அதன் மூலம், தமிழ் மாணவர்களுக்கு விரோதமாக, காங்., செயல்படுவது மீண்டும் உறுதியாகியுள்ளதோ?


தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயகுமார் பேச்சு:
தமிழக காங்கிரசுக்கு, 8 எம்.பி.,க்கள், 18 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதால், கட்சியின் ஓட்டு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது.அப்போ, அடுத்த சட்டசபை தேர்தலுக்குள், அதாவது இன்னும் நான்காண்டுகளில், காங்., இன்னும் வளர்ந்து விடும். அதனால் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்து விட வேண்டியது தான் பாக்கியோ?

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X