வரும் 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்களில் அனுமதி ரத்து!

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வரும் 14 முதல் தைப்பூச விழா நடைபெறும் 18ம் தேதி வரை, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகையான 16ம் தேதி மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது போன்ற புதிய கட்டுப்பாடுகளுடன், 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து அரசு நேற்றிரவு
14 18   வழிபாட்டுத் தலங்கள்,  அனுமதி ரத்து!

சென்னை : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வரும் 14 முதல் தைப்பூச விழா நடைபெறும் 18ம் தேதி வரை, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகையான 16ம் தேதி மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது போன்ற புதிய கட்டுப்பாடுகளுடன், 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து அரசு நேற்றிரவு அறிவித்தது.


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 7ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரவு 10:00 முதல் காலை 5:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு; இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வரும் 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்

* வரும் 14 முதல் 18ம் தேதி வரை, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை

* வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

* பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் நலன் கருதி, பஸ்களில் அமைக்கப்பட்ட இருக்கைகளில், 75 சதவீதம் மட்டும் பயணியர் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவர்

* தற்போது தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்

* தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.


பொது அறிவுரைகள்* இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்

* கடைகளில் பணிபுரிவோர் மற்றும் வாடிக்கையாளர்கள், கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்

* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிவோர், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்

* அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியை தவிர்க்க வேண்டும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது, சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


அச்சம் வேண்டாம்!
கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ கட்டமைப்புகள், தயார் நிலையில் உள்ளதால், பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எனினும், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தொற்றில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க, அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். - முதல்வர் ஸ்டாலின்


பள்ளிகளுக்கு எப்போது விடுமுறை?அரசு ஏற்கனவே பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கிடையாது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் உண்டு. நேற்று பிறப்பித்த ஊரடங்கு நீட்டிப்பின் அடிப்படையில், பொங்கல் பண்டிகை மற்றும் ௧௮ம் தேதி தைப்பூசத்துக்கான அரசு விடுமுறை நாட்களில் மட்டும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை.மற்ற நாட்களில் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆன்லைன்' வகுப்பும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு நேரடி வகுப்பும் நடக்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-202219:36:55 IST Report Abuse
பேசும் தமிழன் இந்துக்கள் யாரும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு செல்ல கூடாது.... இது தான் விடியல் ஆட்சியின் அவலம்... முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர்கள்... பண்டிகை வந்தால்.. ஆலயங்கள் திறக்கப்படும்... ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-ஜன-202218:49:28 IST Report Abuse
அறவோன் அகத்திலிருந்தபடியே பொங்கலை கொண்டாடுவோம், தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து நம்மை நாமே காத்துக்கொள்வோம் 🙏⛑️
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
11-ஜன-202217:06:18 IST Report Abuse
Oru Indiyan அதென்ன ... 10,11,12 ஆம் வகுப்பு. மாணவர்களக்குமட்டும் கொரோணா வராதுன்னு சொல்லுச்சா... சர்ச், மசூதி எல்லாம் வழிபாட்டு தலங்களா இல்லை மதமாற்ற தலங்களா? ஏன்னா , அவிங்க மட்டும் திறந்து வைத்து இருப்பாய்ங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X