உடலில் உப்பின் தாக்கம் பற்றி கூறும், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியை சேர்ந்த, முனைவர் ப.வண்டார்குழலி ராஜசேகர்: துாள் உப்பு என்பதன் வேதியியல் பெயர் தான், இயற்கையிலேயே கிடைக்கும் சோடியம் குளோரைடு. அதாவது, 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு சேர்ந்தது. உணவில் சேர்த்து சாப்பிடும் உப்பு அளவு குறைந்து, உடல் செயல்பாடு குறைந்தால், அவசர சிகிச்சையாக, ஊசி வாயிலாக உப்புக் கரைசல் நீர், உடலில் செலுத்தப்படும்; சோடியம் மிக விரைவாக உடலால் உறிஞ்சப்பட்டு விடும். உறுப்புகளின் செயல்பாடுகள் சரியாக இருந்து, எப்போதாவது மட்டுமே குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டால், உணவு முறை மாற்றத்தின் வழியாகவே அதை சரிசெய்து கொள்ளலாம்.
ஆனால், உப்பு சேர்த்து உலர்த்தும் கருவாடு, ஊறுகாய் வகைகள், 'அஜினோமோட்டோ' சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை, குறை ரத்த அழுத்தம் உள்ள நபருக்குக் கொடுக்கலாம் என நினைப்பது தவறு.இப்பொருட்களில் சேர்க்கப்படும் உப்பு, தேவைக்கு அதிகமாகவே இருப்பதால், தொடர்ச்சியாக சாப்பிடும் போது அவர்களுக்கு தெரியாமலேயே, ரத்தத்தில் சோடியம் அளவு சட்டென்று அதிகரித்து விட வாய்ப்புஉள்ளது. அப்படி அதிகரித்தால், சிறுநீரக ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்படும். நாம் உபயோகிக்கும் துாள் உப்பை பக்குவப்படுத்தும் போது, வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் துாளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவும், 'சோடியம் அலுமினோசிலிகேட்' அல்லது 'மெக்னீசியம் கார்பனேட்' ஆகிய வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இவை அனைத்தும் உப்புக்கு நல்லது; உடலுக்கு அல்ல. எனவே, கடற்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கல் உப்பை மட்டுமே சாப்பிடுவது நல்லது; அதுவும் அளவுடன் இருக்க வேண்டும்.சோளம், கடலை, துவரை, அரைக்கீரை, பசலை, முள்ளங்கி, பலா, பலாக்கொட்டை, தாமரை தண்டு வற்றல், முலாம் பழம். காலிபிளவர், வெந்தயக்கீரை, கொத்தமல்லி தழை போன்றவை, குறை ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். இவையனைத்திலும் சோடியம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ளன. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement