மண்ணானாலும், கல்லானாலும்... 'பொங்கும்' நெரிசல்!

Added : ஜன 11, 2022
Advertisement
சித்ரா, வீட்டின் கதவை திறக்கவும், 'ஹாரன்' அடித்தபடியே வந்த சித்ரா, வாசல் முன் டூவீலரை நிறுத்தவும் சரியாக இருந்தது. இருவரும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடை நோக்கி சென்றனர்.''பொங்கல் பரிசு தொகுப்புல பணம் இல்லாததால, ரேஷன் கடைகள்ல பெரிசா கூட்டமில்ல மித்து. பல கடைகள்ல துணிப்பை பற்றாக்குறை, இலவச வேட்டி சேலை தராம இருக்கறதில்லன்னு ஏகத்துக்கும் குழப்பம் இருக்கு.
 மண்ணானாலும், கல்லானாலும்...   'பொங்கும்' நெரிசல்!

சித்ரா, வீட்டின் கதவை திறக்கவும், 'ஹாரன்' அடித்தபடியே வந்த சித்ரா, வாசல் முன் டூவீலரை நிறுத்தவும் சரியாக இருந்தது. இருவரும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடை நோக்கி சென்றனர்.''பொங்கல் பரிசு தொகுப்புல பணம் இல்லாததால, ரேஷன் கடைகள்ல பெரிசா கூட்டமில்ல மித்து. பல கடைகள்ல துணிப்பை பற்றாக்குறை, இலவச வேட்டி சேலை தராம இருக்கறதில்லன்னு ஏகத்துக்கும் குழப்பம் இருக்கு. இதனால, கட்சிக்கொடி, தோரணம் கட்டி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி போட்டோவுக்கு 'போஸ்' குடுத்துட்டு ஆளுங்கட்சிக்காரங்க 'கப்சிப்'ன்னு ஒதுங்கிட்டாங்களாம்,''''பொங்கல் பரிசு தொகுப்போட, இலவச வேட்டி சேலையும் சேர்த்து தரணும்னா, எங்களுக்கு ஊக்கத்தொகை வேணும்ன்னு, ரேஷன்கடைக்காரங்க கேட்டிருக்காங்க. அத ரெவின்யூகாரங்க பார்த்துப்பாங்க; நீங்க பொங்கல் பரிசுதர்ற வேலைய மட்டும் கவனிங்கன்னு, சொல்லீட்டாங்களாம். அதனால, எல்லா தாலுகா ஆபீசிலயும் வேட்டி, சேலை குவிஞ்சு கிடக்குதாம்,'' என்றாள் சித்ரா.''ஆனா, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,தொகுதிக்கு மட்டும் கூடுதலா வேட்டி, சேலை போயிருக்குன்னு பேசிக்கிறாங்களே. மத்த கடைகளுக்கு, 40 சதவீதம் அளவுக்கு தான், வேட்டி, சேலை அனுப்பி வைச்சிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.காசு தான் 'டாஸ்க்!'ரேஷன் கடை வாசலில் டூவீலரை 'பார்க்கிங்' செய்தாள் சித்ரா. கூட்டம் மிகவும் குைறவாக இருந்ததால், பொருட்களை வாங்கி, மித்ரா வீட்டுக்கு சென்ற இருவரும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.மித்ராவின் அம்மா சூடாக, காபி கொடுத்தார். இருவரும் அருந்த ஆரம்பித்தனர்.''இப்படிதான்க்கா, இனி, தேவைக்கு மட்டும் தான் வெளியே போகணும். கொரோனா ஜாஸ்தியாகுது,'' என்ற மித்ரா, ''பல்லடத்தில, இலை கட்சி நிர்வாகி ஒருத்தரு சூரிய கட்சியில ஐக்கியமாகிட்டாரு. ஏற்கனவே, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கற ஒயின்ஷாப் பாரை அவருதான் நடத்திட்டு வர்றாராம்,''''இப்போ 'எக்ஸ்ட்ரா' கடை வேணும்ன்னு துாண்டில் போட்டுருக்காரு. எங்க கட்சிக்கு வந்தாதான் கடை கிடைக்கும்னு ஆளுங்கட்சி தரப்பு கறாரா சொல்ல, தடுமாற்றமே இல்லாம கட்சி தாவிட்டார்ன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''ஆட்சி மாறுன்னா, இந்த மாதிரி, காட்சியெல்லாம் மாறும்ன்னு, என் மாமா பழனிசாமி, அடிக்கடி சொல்வாரு,'' என்றாள் சித்ரா.ஒருங்கிணைப்பு 'மிஸ்ஸிங்'ரிமோட்டை எடுத்து, சித்ரா 'ஆன்' செய்ய, ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு தொடர்பான செய்தி ஒளிபரப்பானது.அதனை பார்த்த மித்ரா, ''கொரோனா அதிகமாகிட்டே வருதுன்னு சொல்றாங்க. எலக்ஷன் வேற நடத்துறாங்களே. அப்படியே, 'லோக்கல்பாடி' எலக்ஷனையும் நடத்துவாங்களோ...'' என்றாள்.''அப்படித்தான் தெரியுது மித்து. ஆனா, எலக்ஷன் ஏற்பாடுகள்ல நிறைய குழப்பம் இருக்குதாம். மாநில தேர்தல் கமிஷனோட உத்தரவு, அறிவிப்பு எல்லாம், முறையா அரசியல் கட்சிகளுக்கு போய் சேர்றது இல்லையாம்,''''ஓட்டு மிஷின் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல் வெளியீடுன்னு எதுவுமே வெளிப்படையா நடக்கலைன்னு, கட்சிக்காரங்க புலம்பறாங்க. இப்படிதான், எலக்ட்ரானிக் ஓட்டு மெஷின் ஒதுக்கீடு செய்ற முகாம் தொடர்பா, லெட்டர் அனுப்பினாங்க. அதுல, எந்த தேதியில, எந்த நேரத்துல கூட்டம் நடக்குதுங்கற விவரமே இல்லையாம்,''என நிலைமையை விளக்கினாள் சித்ரா.அரசியல்ல சாதாரணமப்பா...''மாவட்ட அளவுல எலக்ஷன் நடத்துற ஆபீசரா இருக்க, கலெக்டர் தான் இதை கவனிக்கனும்,'' என்ற மித்ரா, ''கொஞ்ச நாள் முன்னாடி, 'தோழர்' எம்.பி., தன்னோட கட்சி நிர்வாகிகளுடன் போய் 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சி நடத்தினாரு. கட்சிக்காரங்க ஏற்கனவே, 'பிரின்ட்' செய்யப்பட்ட பார்ம்கள மக்கள்கிட்ட கொடுத்து, கூட்டம் சேர்த்துட்டாங்க,''''மக்கள் வரிசையா வந்து, எம்.பி.,க்கிட்ட மனு கொடுத்தாங்க. எம்.பி.,யும் அதை கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு பரிந்துரை செஞ்சிட்டு இருந்தாரு. அப்போ, இலை கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருத்தரு, 'ஸ்கூலுக்கு கிளாஸ் ரூம், டாய்லெட் வேணும்'னு மனு கொடுக்க, 'நீங்க அஞ்சு தடவ கவுன்சிலரா இருந்து இருக்கீங்க. நீங்களே செஞ்சிருக்கலாமே...'' என, சில தோழர்கள் கேட்டிருக்காங்க,''அதுக்கு ''மனு கொடுத்துட்டா, உடனே செஞ்சு குடுத்திட போகிறீங்களா என்ன? ஏதோ வார்டுக்குள்ள வந்திருக்கீங்களேன்னு தான் மனு கொடுக்கிறோம். முடிஞ்சா செய்யுங்க, இல்லன்னா, நாங்களே பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாராம், 'முருகர்' பேர் வைச்ச அந்த முன்னாள் கவுன்சிலர்,'' என்றாள்.''இதே மாதிரிதான்டி, அப்பாச்சி நகர்ல, அடுக்குமாடி வீட்டுக்கு தேர்வான பயனாளிங்க சில பேரு, பங்களிப்பு தொகை செலுத்த வசதியில்லாததால, கார்ப்ரேஷனோட மானிய திட்டத்துல மானியம் வாங்கி தரணும்னு, எம்.பி.,க்கிட்ட மனு கொடுத்திருக்காங்க,''''மானியம் கிடைக்குமான்னு தெரியல. வேணும்னா, பேங்க் லோன் வாங்கித்தறோம்'ன்னு, எம்.பி., சொல்ல,'எங்களுக்கு உடனே பேங்க்காரங்க, லோன் குடுத்துடுவாங்களா?'ன்னு, புலம்பிட்டே மக்கள் நகர்ந்துட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.குவாரிக்குள்ள 'கல்லா!'''அக்கா... கல் குவாரி மேட்டர் இருக்குதுன்னு, சொன்னீங்களே...'' என நினைவுபடுத்தினாள் மித்ரா.''யெஸ், மறந்துட்டேன். ஊத்துக்குளியில நிறைய குவாரிங்க, அனுமதி வாங்காம செயல்படுது. குவாரிக்காரங்க, சம்மந்தப்பட்ட ஆபீசர்ங்க, போலீஸ்காரங்களுக்கு, மாசாமாசம் மாமூல் குடுத்துடறாங்க. இப்போ என்னடான்னா, வெளி மாவட்டங்கள்ல இருந்தும் சில 'லெட்டர் பேட்' கட்சிகள் வசூல் பண்ணிட்டு போறாங்களாம்,''''இதே மாதிரி, தாராபுரம், உடுமலையில அனுமதியில்லாம மண் கடத்துற விவகாரத் துல, அதிகாரிங்க வெறும் கண் துடைப்புக்கு ஆய்வு நடத் தறாங்களாம். விவசாய சங்கங்கள் அப்டிங்கிற பேர்ல, அதிகாரிகளுக்கு வசூல் பண்ணி குடுக்கறாங்களாம்...'' என்றாள் மித்ரா.''நம்ம டிஸ்க்ரிட்டல இருக்கற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்ல, பாலின் தரம் தெரிஞ்சுக்கிற மிஷின் எல்லாம் வைச்சிருக்காங்க. அதோட விலை என்னமோ, சில ஆயிரம் ரூபா தான்; ஆனா, பல ஆயிரத்துக்கு 'பில்' போட்டிருக்காங்களாம்,''''இப்ப என்னன்னா, அந்த மிஷின்ல, பாலோட தரத்தை பார்க்காம, தனியார் நிறுவனத்துக்கு போய் பாலின் தரத்தை பார்த்து, 'சர்டிபிகேட்' வாங்கிட்டு வாங்கன்னு சொல்றாங்களாம். சொசைட்டியில இருக்கற மிஷினும், பிரைவேட் இடத்துல இருக்கற மிஷினும் வேற வேற மாதிரி 'ரிசல்ட்' சொல்லுதுன்னு பால் உற்பத்தியாளர்கள் புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.போலீசுக்குள் 'பஞ்சாயத்து'''இந்த கொடுமையை எங்க போய் சொல்ல'' என புலம்பிய மித்ரா, ''எஸ்.ஐ.,க்கே ட்யூட்டி போடற ஏட்டையாவை பத்தி சொல்றேன் கேளுங்க,'' என பேச்சை மாத்தினாள்.''நார்த் டிராபிக்ல, 'ட்யூட்டி' பார்க்கறது சம்மந்தமா, சின்ன ஆபீசருக்கும், ஏட்டையாவுக்கும் போன்ல காரசார விவாதம் நடந்துருக்கு. அந்த ஆபீசருக்கு, ஏட்டையா 'ட்யூட்டி' போட்டது மட்டுமில்லாம, அவரு 'ரோல் கால்' எடுக்க வர்றது இல்லைன்னு வேற பேசியிருக்காரு,''''இந்த 'ஹாட்'டான விஷ யங்களை கவனிக்க வேண்டிய 'குளுகுளு' ஆபீசர் 'கூலா' இருக்காராம். ஒரு வேளை அவரோட துாண்டுதல்ல தான், அந்த ஏட்டையா அப்படி பேசியிருப்பாரோன்னு கூட பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''வீட்டின் கதவை கூரியர் பையன் தட்ட, அக்கா, இங்கே ஜெயக்குமார், சரவணன்னு யாராவது இருக்காங்களா''ன்னு கேட்க, முகவரி சொல்லி அனுப்பினாள் மித்ரா.''காங்கயத்திலுள்ள 'குமார'ரான போலீஸ் ஆபீசர், கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர் மாதிரியாம். கட்சிக்காரங்கள கேட்காம எதுவுமே செய்றது இல்லையாம்,'' என, பேச்சு வாக்கில் ஒரு தகவலை சொன்னாள் மித்ரா.''ஓ.கே., மித்து. நா கெளம்பறேன். விஷ் யூ ேஹப்பி பொங் கல்...'' எனக்கூறிய, பொங்கல் பரிசு தொகுப்பை, வண்டியில் வைத்து 'விர்…'ரென வீடு நோக்கி கிளம்பினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X