வீட்டிற்கே சென்று 'பூஸ்டர்' தடுப்பூசி முதியோருக்காக மாநகராட்சி நடவடிக்கை

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | |
Advertisement
சென்னை ;'சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, வீடுகளுக்கே சென்று 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்களை கடந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோயுடன் உள்ள, 60வயதிற்கு மேற்பட்ட
 முதியோருக்கு, வீட்டிற்கு,பூஸ்டர்,  மாநகராட்சி

சென்னை ;'சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, வீடுகளுக்கே சென்று 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்களை கடந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோயுடன் உள்ள, 60வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்ற 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படுகிறது.


latest tamil news




எனவே, சென்னையில் தகுதியானவர்கள், http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதளத்தில், அதற்கான மையங்களை தெரிந்து கொண்டு, அங்கு நேரடியாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.அவ்வாறு செல்வோர், இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், மாநகராட்சி தடுப்பூசி முகாமில் டாக்டரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை, ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஓர் அடையாள அட்டையை, உடன் கொண்டு செல்ல வேண்டும்.இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 1913; 044 - 2538 4520; 4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, தங்கள் விபரங்களை பதிவு செய்தால், அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும். இதில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X