உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குஜராத் முதல்வராக இருந்த மோடி, இந்த நாட்டின் பிரதமராகும் போது தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த நாட்டின் பிரதமராக முடியாதா?' என்று கேள்வி கேட்கிறார், வி.சி., தலைவர் திருமாவளவன்.

'பைலட்' ஆக வேலை பார்த்த ராஜிவ், அரசியலுக்கு வராமலேயே பிரதமர் ஆனார். ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற மோடி, பிரதமராகி விட்டார். சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் அரசியலில் இறங்கி முதல்வராகினர்.
சாதாரண பியூன் வேலைக்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி என்று ஒன்று இருக்கிறது. நம் நாட்டை ஆளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் எந்த கல்வி தகுதியும் தேவையில்லை என்பதால், யார் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம்.
இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர், தேசிய சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும். எந்த மதத்தையும், மொழியையும் எதிர்க்கும் குறுகிய மனம் படைத்தவராக இருக்கக் கூடாது. பிரிவினைவாத கொள்கை உடைய கட்சியை சேர்ந்தவராக இருக்க கூடாது.

இப்போது சொல்லுங்கள், ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறதா?பல்வேறு கலாசாரம், பல மொழிகள் உள்ள இந்நாட்டில், 'திராவிட நாடு' கொள்கை உடைய தி.மு.க., தலைவருக்கு, பிரதமர் ஆசை வரலாமா?பிரதமர் என்பவர், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று நினைத்து வாழும் பண்பாளராக இருக்க வேண்டும்.
ஹிந்தி உட்பட பிற மொழிகள் மீது வெறுப்பு உடையவர் எப்படி இந்நாட்டின் பிரதமராக முடியும்?சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று வாழும் கொள்கை உடையவராக இருக்கக் கூடாது.இப்படி பல்வேறு தகுதிகள் இருப்பவரே, இந்நாட்டின் பிரதமராக இருக்கமுடியும்.
'ஜெய்ஹிந்த்' என்று சொல்வதையே கேவலமாக நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் எப்படி பிரதமர் ஆக முடியும்? முதல்வர் ஸ்டாலினிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி, 'ஐஸ்' வைக்கக் கூடாது.
'வாங்குன காசுக்கு மேல கூவுறாரு...' என்ற நடிகர் வடிவேலு காமெடி தான் நினைவுக்குவருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE