பொங்கல் விடுமுறையில் குழப்பம்; கேரள அரசிடம் தமிழர்கள் முறையீடு

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (5)
Advertisement
கோவை : 'பொங்கல் விடுமுறையை எப்போதும் போல், தை 1ம் தேதி என அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசிடம், கேரள தமிழர்கள் முறையிட்டுள்ளனர்.கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் பூர்விகமாக தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில், ஓணம் பண்டிகைக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது போல,
Pongal Holiday, Kerala, Tamil

கோவை : 'பொங்கல் விடுமுறையை எப்போதும் போல், தை 1ம் தேதி என அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசிடம், கேரள தமிழர்கள் முறையிட்டுள்ளனர்.

கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் பூர்விகமாக தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில், ஓணம் பண்டிகைக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது போல, கேரளாவிலும் இம்மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களுக்காக, பொங்கல் பண்டிகைக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்து வருகிறது.

இதன்படி, 12 ஆண்டுகளாக தை முதல் நாள் அரசு விடுமுறை என்பது, கேரளாவில் நடைமுறையாக உள்ளது. இந்தாண்டில் தை முதல் நாள் ஜன., 14ம் தேதி வருகிறது. ஆனால், கேரள அரசு வெளியிட்ட காலண்டரில் ஜன., 15 தைப்பொங்கல் என அச்சிடப்பட்டுள்ளது.


latest tamil news



கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலர் பேச்சிமுத்து கூறியதாவது: தை மாதம் முதல் நாள் தான், பொங்கல் விடுமுறை விடப்பட வேண்டும். அதை கேரள அரசு, தன்னிச்சையாக தை 2ம் தேதிக்கு மாற்றுவது தவறு. எப்போதும் போல் தை முதல் தேதியை பொங்கல் விடுமுறையாக அறிவிக்க வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் தமிழ் அமைப்பினர், அரசிடம் முறையிட்டுள்ளனர்.

தமிழக அரசின் அதிகாரபூர்வ காலண்டர், விடுமுறை நாள் பட்டியல், கேரள அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கேரள அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-202207:40:49 IST Report Abuse
Bhaskaran பதினான்கு மாலை தான் மாதம் பிறக்கிறது அதனை வைத்து கேரளா அரசு விடுமுறை அறிவித்தது என்னவோ
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
11-ஜன-202206:19:57 IST Report Abuse
Balasubramanian கேரள அரசு செய்தது சரியே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் 15 தேதி பொங்கல் வரும் ஆந்திராவிலும், கர்நாடக அரசும் இதன்படி மாற்றி அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் பார்க்கும் நாள் கிழமை போன்ற வழக்கங்ளுக்கும், இப்போதைய தமிழக அரசுக்கும் வெகு தூரம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-202206:16:23 IST Report Abuse
Kasimani Baskaran தெலுங்கனே பொங்கலை புத்தாண்டு என்று கொண்டாட முற்படும் பொழுது மலையாளி மட்டும் குசும்பு பண்ண மாட்டானாக்கும்? தமிழ்நாடு தமிழனுக்கா அல்லது ஆந்திர தெலுங்கனுக்கா அல்லது கர்நாடக கன்னடனுக்கா என்பதை தமிழன் நிரந்தரமாக முடிவு செய்வது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X