கோட்டயம் : கேரளாவில் பரஸ்பரம் மனைவியரை மாற்றிக் கொள்ளும் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கருகாச்சல் பகுதியைச் சேர்ந்த பெண், தன் கணவர் வேறு ஒருவருடன் சட்டவிரோத உறவு கொள்ளும்படி தன்னை துாண்டுவதாக போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். அப்போது, கேரளாவில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மனைவியரை மாற்றி உடலுறவு கொள்ளும் கும்பல் செயல்படுவது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் 'டெலிகிராம், மெசஞ்சர்' போன்ற செயலிகள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, தங்கள் மனைவியரை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்வது தெரியவந்தது. இந்த கும்பலில் புகார் கொடுத்த பெண்ணின் கணவரும் உள்ளார்.
இதையடுத்து அதிரடி வேட்டை நடத்தி கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து உள்ளோம். இந்த கும்பலில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE