சென்னை: சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை விமான நிலையத்தின் எல்லை, அடையாறு ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது. இதனால், சென்னையில், கனமழை பெய்யும்போது, விமான நிலையம் வெள்ள அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது.
![]()
|
தற்போது, அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை, தொடர்ந்து அறிந்து கொள்ளும் வகையில், நீரின் அளவை தானாக பதிவு செய்யும், தானியங்கி இயந்திரம், இரண்டாவது விமான ஓடுபாதை பாலம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம், அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை தொடர்ந்து பதிவு செய்து, சென்னை விமான நிலைய நிர்வாக கட்டடத்தில் அமைந்துள்ள, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.
![]()
|
பாலத்தின் கீழ் ஓடும் நீரின் அளவு, 9.5 மீட்டர் வரை உயரும் போது, கட்டுப்பாட்டு அறையில், அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கும். மேலும், விமான நிலையத்தின் 10 அதிகாரிகளுக்கு, எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படும்.
கனமழை காலங்களில், சென்னை விமான நிலையத்தின் முக்கிய பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.