கணவர் தற்கொலைக்கு பின்னும் வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய சாதனை பெண்

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (38)
Advertisement
பெங்களூரு: காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலைக்கு பிறகு, அவரது மனைவி மாளவிகா ஹெக்டே அதீத கடனில் தத்தளித்த நிறுவனத்தை தூக்கி நிறுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாதித்துள்ளார்.பிரபல காபி டே நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் 165 நகரங்களில் செயல்பட்டு வந்த முன்னணி நிறுவன
Cafe Coffee Day, VG Siddhartha, Malavika Hegde, கபே காபி டே, நிறுவனம், சித்தார்த்தா, மாளவிகா ஹெக்டே, கடன், சாதனை

பெங்களூரு: காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலைக்கு பிறகு, அவரது மனைவி மாளவிகா ஹெக்டே அதீத கடனில் தத்தளித்த நிறுவனத்தை தூக்கி நிறுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாதித்துள்ளார்.

பிரபல காபி டே நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் 165 நகரங்களில் செயல்பட்டு வந்த முன்னணி நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் பெயரில் அவருக்கு இருந்த கடன்கள் காரணமாக முதலீட்டாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகள், வருமானவரித்துறையினரின் குற்றச்சாட்டுகள் என பல காரணங்களால் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.


latest tamil news


அவரின் தற்கொலை செய்தபோது, காபி டே நிறுவனத்திற்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்தது. இந்த சூழலில் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிகளவிலான கடன், முதலீட்டாளர்களின் அதிருப்தி என அவருக்கு முன்னால் இருந்த ஏராளமான சவால்களை எதிர்கொண்டு, சிறப்பாக செயல்பட துவங்கினார். துணிச்சலாக அனைத்தையும் சமாளித்த மாளவிகா, 18 மாதங்களில் 3500 கோடி அளவிற்கு அந்நிறுவனத்தின் கடனை குறைத்தார்.


latest tamil news


தொடர்ந்து வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய மாளவிகா, தன் கணவரின் காபி டே நிறுவனத்தின் கடனை பெருமளவு குறைத்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளார். கணவரின் மறைவால் துவண்டு போய், அதீத கடனையும் வென்று சாதித்துள்ள மாளவிகாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat Subbarao - Chennai,இந்தியா
18-ஜன-202210:07:03 IST Report Abuse
Venkat Subbarao சும்மா சொல்லக்கூடாது பெண்கள் அனைவரும் இந்த அம்மாவை முன்மாதிரியாக நினைத்து செயல்பட்டால், அற்புதமான முன்னேற்றம் கிடைக்கும் இதில் எள்முனை அளவும் சந்தேகமில்லை , நன்றி வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புற வாழ்த்துக்கிறேன்
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
12-ஜன-202210:00:10 IST Report Abuse
Bala Murugan உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு சாதனை பெண்ணை பார்க்கிறோம். தொடர்ந்து உங்கள் நிறுவனம் சிறந்து மீதமுள்ள கடனும் அடைத்து விட வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்திய அரசு சார்பில் விருது கிடைக்க வாழ்த்துக்கள். கொஞ்சம் ஊக்குவித்து தைரியம் சொல்லி இருந்தால் உங்கள் கணவர் இப்போது இருந்திருப்பார்.
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
12-ஜன-202209:58:49 IST Report Abuse
Bala Murugan உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு சாதனை பெண்ணை பார்க்கிறோம். தொடர்ந்து உங்கள் நிறுவனம் சிறந்து மீதமுள்ள கடனும் அடைத்து விட வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்திய அரசு சார்பில் விருது கிடைக்க வாழ்த்துக்கள். கொஞ்சம் ஊக்குவித்து தாஹிரியம் சொல்லி இருந்தால் உங்கள் கணவர் இப்போது இருந்திருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X