மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் திருப்பம்

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில், பன்றியின் இதயத்தை 57 வயது நபருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார்.இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து
மனிதர், பன்றி இதயம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, திருப்பம்

வாஷிங்டன்: அமெரிக்காவில், பன்றியின் இதயத்தை 57 வயது நபருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார்.


latest tamil news



இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்ததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.
எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது. இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும்.


latest tamil news


உலகெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்துள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
12-ஜன-202203:09:38 IST Report Abuse
Ramesh Sargam இனி பன்றிகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். ஆடு, மாடு இவைகளுடன் பன்றிகளை மக்கள் வளர்க்கவேண்டும்.
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
11-ஜன-202219:06:36 IST Report Abuse
W W DNA வில் மாற்றம் செய்து மனிதனுக்கு பொருந்தும் படி அமைத்து இருதுய சிகிச்சை என்பது அவ்வளவ்யு எளிதல்ல, இறைவனின் படைய்பில் ஒரு அதிசியம்.அந்த இறைவனுக்கு நன்றி . இதன் Team ல் பங்கு பெற்ரோர் அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-ஜன-202218:53:50 IST Report Abuse
Loganathan Kuttuva மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X