தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இந்தியா பேட்டிங்| Dinamalar

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இந்தியா பேட்டிங்

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (1) | |
கேப்டவுன்: தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்டில் ‛டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இந்தியா பேட்டிங்

கேப்டவுன்: தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்டில் ‛டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் இன்று (ஜன.,11) துவங்கியது.


latest tamil news


இந்த டெஸ்டில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் மோதுகின்றன. ‛டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, மயங்க் அகர்வால், ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X