வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்; மக்கள் கவலைப்பட வேண்டாம் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லியில் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்த கெஜ்ரிவால், பின்னர் கூறுகையில், யாரும் கவலைப்பட வேண்டாம். ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். மக்களை காக்க வேண்டிய கடமை உள்ளது. அவர்களின் வேலைவாய்ப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், டில்லியின் என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதனை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

டில்லியில் கோவிட் உச்சமடைதல் தொடர்பாக யாரும் எந்த கருத்தையும் கூறவில்லை. தற்போது தொற்று உறுதியாகும் விகிதம் 25 சதவீதமாக உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என பார்ப்போம். தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும், கோவிட் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் படிப்படியாக அகற்றப்படும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.