'பிரதமரையும், பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்கவிடாத அரசியல் கட்சியினர்'

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (11)
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் கூட்டத்தில் அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களையும், பிரதமரையும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய
Punjab, Ferozepur, PMModi, BJP, பஞ்சாப், பெரோஸ்பூர், கூட்டம், பிரதமர், பொதுமக்கள், பாஜக, பாஜ,

சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் கூட்டத்தில் அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களையும், பிரதமரையும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், ‛பிரதமரின் வழியில் போராட்டம் நடைபெற்றது எங்களுக்கு தெரியாது. பிரதமருக்கு எவ்வித பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படவில்லை. பிரதமர் பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் கூட்டத்தில் 70 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது, ஆனால் 700 பேர் மட்டுமே வந்துள்ளனர். இதனால், நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கக்கூடும்' என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்நிலையில் பஞ்சாபில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.


latest tamil news


நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் பேசியதாவது: பஞ்சாபில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களிலேயே, பெரோஸ்பூர் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக அமைந்திருக்கும். ஆனால், அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை மட்டுமல்ல, பிரதமரைக் கூட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். இது பா.ஜ., தொண்டர்களை மேலும் பலப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
12-ஜன-202206:55:11 IST Report Abuse
P Sundaramurthy "இலக்கு மட்டுமல்ல, இலக்கை நோக்கிய வழி முறையும் நேர்மையானதாக இருக்கவேண்டும்" பொறுப்பில் இருப்பவர்கள், தனக்கு என்ன தெறியும் என்பதை விட தனக்கு என்ன தெரியாவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் . வீட்டு வாசலில் ஆண்டுகளாக போராடிய மக்கள் கண்ணுக்குப்புலப்படவில்லை , எதோ ஒரு மாநிலத்தின் மாநகர் தொடரி சேவையை திறந்து வைக்க தெரிகிறது , நேரமிருக்கிறது . தலைமை என்பது பகட்டு, விளம்பரம், வியாபாரம் என்பதை தாண்டியதாக இருக்கவேண்டும் .
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-ஜன-202218:44:32 IST Report Abuse
அறவோன் "இது பா.ஜ., தொண்டர்களை மேலும் பலப்படுத்தும்." - 400/70000 x 100 = 0.5 % தான் பலம் 😆😆😆😆😆😆
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-ஜன-202218:39:34 IST Report Abuse
அறவோன் பிரதமரும் வேண்டாம், கூட்டமும் வேண்டாம் என புறக்கணித்ததே மக்கள் தான் 👍👍👍👏👏👏😂😂😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X