இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
வாஷிங்டன்: இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.சீனா-இந்தியாவுடன் லடாக் பகுதியில் தொடர் எல்லை மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா எல்லை விவகாரத்தில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்
இந்தியா,சீனா, எல்லை பிரச்னை,அமெரிக்கா,  வெள்ளை மாளிகை, செய்தித் தொடர்பாளர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.

சீனா-இந்தியாவுடன் லடாக் பகுதியில் தொடர் எல்லை மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா எல்லை விவகாரத்தில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்றார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில் விரைவில் இந்திய-சீன ராணுவ படைகள் இடையே 14வது சுற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்றும் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 20 மாதங்களாக நிலவிவரும் சீன ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து இந்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


latest tamil news


மேலும் இந்திய-சீன எல்லையில் நடைபெறும் தினசரி தகவல்களை அன்றாடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருவதாகக் கூறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் ஹாங்காங், தைவான் உள்ளிட்ட பல நாடுகளை எல்லை விவகாரத்தில் சீனா அச்சுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து அமெரிக்கா எப்போதும் குரல் கொடுக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
12-ஜன-202202:55:26 IST Report Abuse
Ramesh Sargam எங்கோ இரண்டு நாட்டுக்கு பிரச்சினை என்றால், உடனே இந்த அமெரிக்கா, கூப்பிடாத விருந்தாளியா வந்து, அந்த பிரச்சினையில் மூக்கை நுழைத்து, சமரசம் செய்ய வந்துடும். அட பல வருடங்களுக்கு முன்னாடி எப்படி இந்த அமெரிக்கா இருந்ததோ அப்படியே இப்பவும் இருக்குது. திருந்த மாட்டாங்களா...?
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
11-ஜன-202223:18:44 IST Report Abuse
Samathuvan ஏண்டா, உனக்கு எப்போதும் அடுத்தவன் வீட்டுல என்னா நடக்குது பார்கிறது தான் உன்னோட வேலையா? உன்னுடைய நாட்டில், ஏன் உன்னுடைய வீட்டில் உள்ள நாத்தத்தை பார்க்கவே மாட்டியா? எங்களுக்கு தெரியும் எப்படி சுமூகமாக போகனும்ன்னு. ஆனா ஒன்னு, அந்த ஆங்கிலேயன் அடிச்ச ஆப்ப உருவி உங்களுடைய அதில சீக்கிரம் அடிப்போம்டா எழுதி வைத்து கொள்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
11-ஜன-202222:22:49 IST Report Abuse
PRAKASH.P We can't believe USA .. they want always war zones to sell their weapons...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X