சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கால் காசு பிரயோஜனம் இல்லை!

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கால் காசு பிரயோஜனம் இல்லை! முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என்னால் முடிந்ததைச் செய்கிறேன்' என்று சொல்பவன், உத்தமன்; முடியாது என்று தெரிந்த பின்னும், 'செய்து விடுவேன்' என்று வாக்குறுதி கொடுப்பவன், ஏமாற்றுக்காரன்!மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான, 'நீட்' குறித்து உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய


கால் காசு பிரயோஜனம் இல்லை!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என்னால் முடிந்ததைச் செய்கிறேன்' என்று சொல்பவன், உத்தமன்; முடியாது என்று தெரிந்த பின்னும், 'செய்து விடுவேன்' என்று வாக்குறுதி
கொடுப்பவன், ஏமாற்றுக்காரன்!மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான, 'நீட்' குறித்து உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னும், முடிந்து போன அந்த சமாச்சாரத்தை கையில்
எடுத்துள்ளது, தி.மு.க., அரசு.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, நீட் தேர்வு அச்சத்தால் அரங்கேறிய தற்கொலை விவகாரத்தை, சட்டசபை தேர்தலுக்கு வியூகமாகப் பயன்படுத்தியது.
'ஆட்சிக்கு வந்தவுடன் நான் போடும் முதல் கையெழுத்து, நீட் ரத்து என்பது தான்' என, தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முழங்கினார்.

அவரது மகன் உதயநிதியும், தற்கொலை செய்த மாணவ - மாணவியர் இல்லத்துக்கு விரைந்தோடிச் சென்று, 'நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம்' என்று பிரசாரம் செய்தார்.
'நீட் ரத்து' என்பது நடக்காத காரியம் என தெரிந்தும், இவர்கள் அரசியல் நாடகம் நடத்தினர். தந்தையும், மகனும் சொன்ன பொய்யை, அப்பாவி மக்கள் நிஜம் என்று நம்பி ஏமாந்தனர். ஆட்சிக்கு வந்த பின், ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்ற மனப்போக்கு.
அதே போல, இன்று ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் ஆவேசப் பேச்சு, 'முயற்சி செய்கிறோம்' என்ற கண்ணாமூச்சி ஆட்டம், போராட்டம், தீர்மானம், அனைத்துக் கட்சியினர் கூட்டம் என, 'பயாஸ்கோப்பு' காட்டுகின்றனர்.
வழக்கறிஞர் நளினி சிதம்பரம், 'நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கும் இது நன்றாகத் தெரியும்.
முடியாத காரியத்துக்கு முயற்சி ஏன்?இந்த கபட நாடகத்தை விடுத்து, மாணவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு பயிற்சி வழங்குங்கள். அதை விடுத்து, 'சமூக நீதி அது, இது' என்று வீணாக கத்திக் கொண்டிருந்தால், மாணவர்களுக்கு கால் காசு பிரயோஜனமில்லை.
இப்போது ஒன்றும் குடி முழுகவில்லை. மாணவர்களிடம் எதார்த்தத்தை விளக்கிச் சொல்லுங்கள்; ஒன்றும் கெட்டு விடாது!


அறுவை சிகிச்சையை இப்படி செய்யணும்!டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வுக்கு அறுவை சிகிச்சை' என்ற தலைப்பில், இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், 'சித்திரை 1ம் தேதியான தமிழ் புத்தாண்டை, தை மாதத்திற்கு மாற்றியே தீருவோம்' என, தி.மு.க., அரசு குதித்துக் கொண்டிருக்கிறது.தி.மு.க., சார்பில், ஆண்டுதோறும் செப்., 15-ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு மாற்றாக, அ.தி.மு.க.,வும் ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முப்பெரும் விழா
கொண்டாட வேண்டும்.அப்போது தான், தி.மு.க.,வினர் பொங்கல் திருநாளில் கை வைக்க மாட்டார்கள் என்று, அந்த வாசகர் குறிப்பிட்டு இருந்தார்.இப்படியெல்லாம் மறைமுகமாக காரணத்தை தேடிப்பிடித்து, அதி.மு.க., முப்பெரும் விழாவை கொண்டாட தேவையில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல நேரடியாகவே தி.மு.க.,வை எதிர்க்க வேண்டும். கடந்த 2011ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன், 'தை மாதம் முதல் தேதி தான், தமிழ் புத்தாண்டு தினம்' என்று தி.மு.க.,வின் உத்தரவை ரத்து செய்தார்.
காலங்காலமாக இருந்த நடைமுறையில் இருந்த, சித்திரை 1-ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்று அவர் உத்தரவிட்டார்.இதனால் அ.தி.மு.க., வினர், போட்டி போட்டு தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடினர்.தி.மு.க.,வின் எதிரி, அ.தி.மு.க., என்பது உண்மையாக இருந்தால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.'ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, அ.தி.மு.க.,வினர் அனைவரும், சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை விமரிசையாக கொண்டாட வேண்டும். தொண்டர்கள் அவரவர் வீட்டிலேயே அகல் விளக்கு ஏற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்' என, அறிவித்தால் போதும், தி.மு.க., அடங்கி விடும்.
தி.மு.க.,வுக்கு அறுவை சிகிச்சையை இப்படித் தான் செய்ய வேண்டும்.


குமரி கலெக்டராக காஷ்மீர் இளைஞர்!வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: -----------------காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அறிவிக்கப்
பட்டது.காஷ்மீர் என்றாலே ஆப்பிள், படகு சவாரி, கம்பளி, சால்வை என, 'குளுகுளு' சுற்றுலா தான் நினைவுக்கு வரும்.ஆனால், அங்கு முதலீடு, தொழிற்சாலை, வேலைவாய்ப்பு பற்றி இதுவரை யாரும் சிந்திக்கவில்லை.காஷ்மீருக்கு நவம்பரில், 1.27 லட்சம் சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். நாள்தோறும், 4,000 பேர் வருகை என்பது, நம்பிக்கை ஊட்டுகிறது. இதனால் உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பு, வருமானம் கிடைத்துள்ளது.
அரசியல் சட்ட பிரிவு - 370 நீக்கம் ஆன பின், ஜம்மு - காஷ்மீர், லடாக் மக்கள் மனதளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் அங்குள்ள பிராந்திய கட்சிகள், ஏதோ உரிமைகள் பறிக்கப்பட்டதாக, மக்களிடையே துாபம் போடுகின்றன. போதைப்பொருள் புழக்கம், ஆயுத கடத்தல், பயங்கரவாத மூளைசலவை ஆகியவை நிலவும் பகுதியில் மக்களின் மனதை வெல்வது கஷ்டம்.தொழில் மற்றும் சர்வதேச நிறுவனத்தால் வேலைவாய்ப்பும், கைநிறைய சம்பாத்தியம் பெறும் இளைஞர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்; பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க மாட்டார்கள்.
காஷ்மீரில் கம்பளம் நெய்வதும், ஏரியில் படகு விடுவதும் மட்டும் தொழில்களாக இருக்க கூடாது.அங்குள்ள இளைஞர்கள் பொறியாளராக, தேசிய மற்றும் விளையாட்டு வீரர்களாக, காவல் துறை அதிகாரிகளாக உருவாக வேண்டும்.காஷ்மீர் இளைஞர், கன்னியாகுமரி கலெக்டராக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!மத்திய அரசின் நடவடிக்கையால், தேசிய நீரோட்டத்தில் காஷ்மீர் கலந்து விட்டது. இனி, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் செழிக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
12-ஜன-202207:11:05 IST Report Abuse
P Sundaramurthy ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் இன்றைக்கு தேவையற்றவை என்று மாற்றத் தெரிகிறது (ஆளுநர் பதவி தவிர). மாற்றவே முடியாத சட்டம் என்று ஒன்று இருக்கிறதா என்ன ? மக்களின் தேவைக்குத்தான் சட்டங்களே ஒழிய , சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மாற்றமுடியாத சட்டங்களை இயற்றியவர்களை மாற்றிவிட்டால் சட்டங்கள் தானாக மாறிவிடும் . ஒரு தொடர் புள்ளியைக்கூட மாற்றமுடியாது என்றவர்கள் தேர்தல் தோல்வி என்றதும் மொத்தத்தையும் மாற்றிவிட்டார்கள் . மார்ச் பத்தாம் தேதி வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு முன் தரையில் கால் பதித்து நடக்க கற்றுக்கொள்வது நல்லது .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202204:54:23 IST Report Abuse
J.V. Iyer திமுகாவை குற்றம் சொல்லமாட்டேன். இது நடக்காது என்று தெரிந்திருந்தும் கையூட்டு வாங்கிக்கொண்டு வோட்டு போட்ட மக்களைத்தான் சொல்வேன். இப்போது கூவி என்ன பயன்? அனுபவி ராஜா அனுபவி.. இன்னும் நான்கு ஆண்டுகள் போகவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X