ரயிலுக்கு அடியில் விழுந்து உயிர் தப்பிய தாய், குழந்தை

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
வேலுார்:காட்பாடியில், ரயிலுக்கு அடியில் விழுந்த தாயும், குழந்தையும் அதிசயமாக உயிர் தப்பினர்.வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பள்ளிகுப்பத்தை சேர்ந்தவர் யுவராணி, 37. கூலி வேலை செய்கிறார். இவரது ஒன்பது மாத ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு பெங்களூரு செல்வதற்காக காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்று மதியம் 12:00 மணிக்கு வந்து முதலாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தார்.அப்போது,
 ரயிலுக்கு அடியில், விழுந்த, தாய், குழந்தை

வேலுார்:காட்பாடியில், ரயிலுக்கு அடியில் விழுந்த தாயும், குழந்தையும் அதிசயமாக உயிர் தப்பினர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பள்ளிகுப்பத்தை சேர்ந்தவர் யுவராணி, 37. கூலி வேலை செய்கிறார். இவரது ஒன்பது மாத ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு பெங்களூரு செல்வதற்காக காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்று மதியம் 12:00 மணிக்கு வந்து முதலாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தார்.
அப்போது, அங்கிருந்த பிளாட்பாரத்தின் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் குழந்தையை காப்பாற்ற யுவராணி தண்டவாளத்தில் குதித்தார். அப்போது, அந்த தண்டவாளத்தில், யஸ்வந்த்பூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து. இதில் தண்டவாளத்தில் கீழ் அவர்கள் விழுந்தனர்.
இதை பார்த்த டிரைவர் முருகேசன் ரயிலை நிறுத்துவதற்குள் அவர்கள் மீது ரயில் சென்றது. ரயில்வே போலீசார் ரயிலுக்கு அடியில் சிக்கிய குழந்தையுடன் யுவராணியை மீட்டனர். குழந்தை காயமின்றி உயிர் தப்பியது. தலையில் அடிபட்ட யுவராணி வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அரை மணி நேரம் தாமதமாக அந்த ரயில் சென்றது.
ரயில் வந்த வேகத்தின் போது பலத்த காற்று அடித்ததால் அவர்கள் தண்டவாளத்தின் மத்தியில் விழாமல் நடுவில் விழுந்ததால் உயிர் தப்பினர்.காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
16-ஜன-202212:01:52 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam தண்ட வாளங்களுக்கு குறுக்கே விழாமல் இடையே.....என படிக்கவும்........
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
12-ஜன-202214:34:18 IST Report Abuse
David DS உங்கள் தமிழ் அறிவு புல்லரிக்க வைக்கிறது.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
12-ஜன-202214:11:12 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஒரு தண்டவாளத்தின் மத்தியில் விழாமல் இரெண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் விழுந்ததால் யுயிர் பிழைத்தார்கள் என சொல்ல வந்திருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X