வைரஸ்கள் பரவும் தன்மை பற்றி கூறும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலர் சாந்தி: வைரஸ் நோய் எதுவாக இருந்தாலும், அது உருமாறியபடி தான் இருக்கும். ஒரு கட்டத்தில், அலை அலையாக பெருகும். பின், அதுவே வலுவிழந்து குறைந்து விடும்.ஒரு சில வைரஸ்கள், வலு இழக்காமலும் இருக்கும். அதற்கு வெளிநாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.உதாரணத்திற்கு, 'ப்ளூ' காய்ச்சலைச் சொல்லலாம்.நிறைய வைரஸ் நோய்கள், விலங்குகள் மூலம் தான் பரவுகின்றன.
இதற்கு காரணம், இயற்கையாக உள்ள காடுகளை அழிப்பது தான்.காடுகளில் உள்ள பழந்தின்னி வவ்வால்கள் மூலம் சில நோய்கள் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். காடுகளை அழிப்பதால், பறவைகள் மற்றும் விலங்குகள், இருப்பிடத்தை விட்டு வெளியேறி, மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைப் பார்க்கிறோம். அவற்றின் மூலம் நோய்களும் பரவுகின்றன.ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்வதாலும், போக்குவரத்து மிகவும் எளிதாக உள்ளதாலும், மனிதர்கள் மூலமும் நோய்கள் வேகமாக பரவி விடுகின்றன. இதை கவனத்தில் வைத்து, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன், பன்றிக் காய்ச்சல் பெரிதாக பேசப்பட்டது. அதை நாம் தற்போது மறந்து விட்டோம். ஏனெனில், அந்த நோயைக் கட்டுக்குள் வைக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்து விட்டோம்.கொரோனா தொற்றுக்கும் தடுப்பூசிகள் வந்து விட்டன. தடுப்பூசி ஒரு வரப்பிரசாதம்.தமிழகத்தில், இன்னும் ஒரு கோடி மக்கள் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருக்கின்றனர். அது தான் ஒமைக்ரான் பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
எனவே, எல்லாரும் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனாவோ, உருமாறிய கொரோனாவோ... தடுப்பூசி ஒன்று தான் சரியான தீர்வு.அரசு கூறியுள்ளபடி, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமிநாசினி பயன்படுத்துவது என, தடுப்பு முறைகளைச் சரியாக கடைபிடித்தால், உருமாறிய புது வைரஸ்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள, 'ப்ளோரனா' வைரஸ், வழக்கமான கொரோனாவை விட, அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது. காய்ச்சல், சளி, தசை வலி, இருமல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு ஆகியவை இதிலும் தென்படும். இதிலிருந்து தற்காத்துக் கொள்வது தான் மிக மிக அவசியம்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement