வரும் பிப்ரவரியில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர், இம்மாதம் 31ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தொடர், பட்ஜெட் சமர்ப்பிக்கும் தினத்திற்கு, இரண்டு நாள் முன்னதாகக் கூடுவது வழக்கம். இந்தாண்டு பிப்ரவரியில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பட்ஜெட் கூட்டத் தொடரை, ஒரு நாள் முன்னதாக, இம்மாதம் 31ம் தேதி கூட்டலாமா என்பது குறித்து, மத்திய அமைச்சரவையின் பார்லி., விவகாரக் குழு கூடி ஆலோசித்தது.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட சிலர் பங்கேற்றனர்.
விவாதத்தின்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை, வரும் 31ல் துவங்கி, பிப்., 10ம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறும், ஏப்ரலுக்கு மேல் மீண்டும் தொடர்ந்து நடத்தலாம் என்றும் அனைத்து கட்சியினர் கூறியுள்ளதாக, கருத்து தெரிவிக்கப் பட்டது.
எனவே, இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE