மருத்துவ துறையில் புதிய சாதனை மனிதனுக்கு பன்றியின் இதயம்

Added : ஜன 12, 2022 | கருத்துகள் (2)
Share
Advertisement
பால்டிமோர் ;உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நோயாளிக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட டேவிட் பென்னட், 57, என்ற தொழிலாளிக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. அதனால் பன்றியின் இதயத்தை
மருத்துவ துறை, சாதனை மனிதன், பன்றி , இதயம்

பால்டிமோர் ;உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நோயாளிக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட டேவிட் பென்னட், 57, என்ற தொழிலாளிக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. அதனால் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனை குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர்.
உயிர் பிழைப்பதற்கு இது ஒன்றே சாத்தியம் என்ற நிலையில், இந்த மருத்துவ பரிசோதனை முயற்சிக்கு டேவிட்டும், அவரது குடும்பத்தாரும் சம்மதித்தனர்.
இதன்படி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அவருக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களாகியுள்ள நிலையில், புதிய இதயம் செயல்படத் துவங்கியுள்ளது.
மேலும் சில நாட்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பார்.

மனித உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவது மிகவும் குறைவாக உள்ள நிலையில், விலங்குகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக பல ஆண்டு களாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஆனால் இவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவற்றை மனித உடல் ஏற்பதில்லை.இந்நிலையில் மனித உடலில் பொருத்துவதற்கு ஏற்ப பன்றிகளின் மரபணுவில் சில மாற்றங்கள் செய்து வளர்க்கப்படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்பட்ட பன்றியின் இதயமே டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு, அமெரிக்க மருந்து மற்றும் உணவு கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
12-ஜன-202218:13:54 IST Report Abuse
ديفيد رافائيل Hello Dinamalar, உங்க website ல இது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப late news. Why தாமதமான செய்தி?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202204:48:22 IST Report Abuse
J.V. Iyer இங்கு கோவில்ளை இடிக்கும் மக்களுக்கும், ஆணையிட்டவர்களுக்கும் இதயம் உள்ளதா என்று எண்ணத்தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X