வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'சாலைகளில் உள்ள மைல்கல்லில் ஹிந்தியில் எழுதினால் ஹிந்தி திணிப்பு என தி.மு.க. கூறுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதும் அந்த பொருட்களின் பெயர்கள் ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதும் எந்த வகையில் நியாயம்' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: பொங்கலுக்கு ரொக்கத்துடன் கூடிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு துணிப்பையுடன் கூடிய 21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.தரமற்ற பொருட்கள் எடை குறைவு பொருட்களின் எண்ணிக்கை குறைவு துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளை மக்கள் எடுத்துக் கூறினர்.
துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஏற்றுக் கொண்டது.பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளில் ஆங்கிலமும் ஹிந்தியும் இடம் பெற்றுள்ளன; தமிழ் இல்லை.சாலைகளில் உள்ள மைல்கல்லில் ஹிந்தியில் எழுதினால் ஹிந்தி திணிப்பு என தி.மு.க. கூறுகிறது.
ஆனால் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதும் அந்த பொருட்களின் பெயர்கள் ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதும் எந்த வகையில் நியாயம்? இந்த பொருட்களை உற்பத்தி செய்துதர தமிழகத்தில் நிறுவனங்களே இல்லையா.பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
பொங்கல் தொகுப்பு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பொங்கல்
பொருட்களில்
இந்தி
திணிப்பா ?
........
|

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement