கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்; கோவையில் 18 லாரிகள் சிறைபிடிப்பு

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்றதாக, 18 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.கோவை மதுக்கரை, பெரியகுயிலி, தேக்காணி, செட்டிப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து பெரிய சைஸ் கருங்கற்கள், சிறிய ஜல்லி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவை அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுமதியின்றி எடுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்றதாக, 18 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.



latest tamil news



கோவை மதுக்கரை, பெரியகுயிலி, தேக்காணி, செட்டிப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து பெரிய சைஸ் கருங்கற்கள், சிறிய ஜல்லி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவை அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுமதியின்றி எடுத்து செல்லப்படுகின்றன. உரிமம் இருந்தாலும், தமிழக பதிவு எண் உடைய லாரிகள் அதிகபட்சம், 2 டன் அளவுக்கு மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இந்த அளவை மீறி எடுத்து சென்றால், ஒவ்வொரு டன்னுக்கும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.அதேநேரம், கேரளா பதிவு எண் உடைய லாரிகளில், கோவையில் இருந்து ஒவ்வொரு லாரியிலும் குறைந்தது, 10 முதல், 20 டன் வரை கற்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இதை கனிமவளத்துறை மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை.


latest tamil news



இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை, கனிமவள பொருட்களை எடுத்து சென்ற கேரளா பதிவு எண் கொண்ட 18 லாரிகளை, தமிழக லாரி டிரைவர்கள் சிறைபிடித்தனர். இவை செட்டிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் செட்டிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்து தகுந்த உரிமத்துடன் தான் பொருட்களை எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இறுதியில் நேற்று மாலை 18 லாரிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்து விடுவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamurthy - chennai,இந்தியா
12-ஜன-202219:16:35 IST Report Abuse
krishnamurthy அருணன் எங்கே
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
12-ஜன-202214:27:52 IST Report Abuse
Sathish மலையாளிகளுக்கு கால் கழுவிவிடும் தமிழக மக்கள் இருக்கும்வரை அவர்கள் நம்மிடம் சுரண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். ஒரு ரப்பர் மரத்தை நம்மவர்கள் அங்கே சென்று தெரியாமல் வெட்டி கொண்டுவர முடியுமா? கண்டுபிச்சா என்ன செய்வானுங்க தெரியுமா? மலையாளிகளுடன் வாழ்ந்திருந்தால் தெரியும். நான் மட்டும் இங்கே கூப்பாடு போட்டு என்ன பயன். மொதல்ல அவங்கள வெச்சு படம் எடுத்து பிழைக்கும் நம்மவர்களை சொல்லணும். தூக்கி தலையில் வெச்சு ஆடுங்க அவன் இதுவும் செய்வான் இன்னமும் செய்வான்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
12-ஜன-202214:26:06 IST Report Abuse
Kumar மனுநீதி சோழர் விடியல் இதுக்கு என்ன நீதி சொல்லுவாரு? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்ம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X