ஒவ்வொருக்கு ஒரு சட்டம்!பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் நானும் வந்துட்டேன்னு கோல்டு சிட்டி மேடமும் பங்கேற்றாங்க. நேற்று கோல்டு சிட்டிக்கு வந்தாரு. வட்டாட்சியர் ஆபிசில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்றாரு. முக கவசம் அணியாமல் வந்த அவரிடம் முககவசம் அணிய வேண்டும் என சொல்ல யாருக்கும் தைரியமில்லை. பொது ஜனமாக இருந்தால், மீட்டிங் ஹாலில் சேர்த்திருப்பாங்களா. சாலைகளில் முக கவசம் அணியாதவங்களிடம் அபராதம் வசூல் செய்றவங்க, மேடத்திடம் வசூலித்திருக்கலாமே.
எரகோள் நீர் கிடைக்குமா?
பல நுாறு கோடி ரூபாய் செலவில் எரகோள் அணை கட்டினாங்க. துளி கூட நீர் இல்லாததா, முந்தைய முதல்வர் திறக்கல. அண்மையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து அணையில் சேர்ந்துள்ளது.இந்த அணை நீர் கோல்டு சிட்டிக்கு கிடைக்குமா; கிடைக்காதா என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.ப.பேட்டை உட்பட 3 தாலுகாகளுக்கு குடிநீர் கிடைக்கும்னு சொல்றாங்களே தவிர, கோல்டு சிட்டி தாலுகாவுக்கு உண்டா என உறுதியளிக்க வேணும்னு 'மாஜி' ஒருத்தரு கவர்மென்டிடம் கோரியிருக்காராம்.நல்லா தான் யோசிக்கிறாங்க!பதினைந்து வருஷத்துக்கு முன் ரா.பேட்டை பஸ் நிலையத்துக்கும், எம்.ஜி.,மார்க்கெட்டுக்கும் இணைக்கிற இரும்பு நடைபாதை பாலம் அமைக்க , முனிசி., கூட்டத்தில் வாத விவாதம் செஞ்சாங்க. 'ஓகே'ன்னு, ஒருமித்த ஆதரவோடு முடிவு தீர்மானித்தாங்க. ஆனா, திட்டம் அமலுக்கு வரவே இல்லை.நகர மேம்பாட்டுக்கு நன்றாக தான் யோசிக்கிறாங்க.
ஆனால் செயல்படுத்த தவறி விடுவதே, வழக்கமா போயிடுச்சி.முக்கிய புள்ளிகள் பந்தா காட்டத்தான் பதவி பயன்படுகிறதே தவிர, அபிவிருத்தி பணிகளுக்கு எடுபடலை.பூங்கா பேரில் பல கோடி பாழ்!வார்டுக்கொரு பூங்கா வீதம் 35 வார்டிலும் அமைச்சாங்க. ஒரு பூங்காவுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் செலவு செஞ்சாங்க. அதன் கதியை கவனிக்க ஆளே இல்லை. முனிசி., முதல் கூட்டத்தில் பூங்கா அமைத்ததில் பெரும் ஊழல் நடந்ததாக காட்டுக்கூச்சல் போட்டாங்க.
பின்னர், ஆக் ஷன் ஒண்ணையும் காணல. அது பற்றி யாருமே எதுவுமே செய்ய முடியாமல் போனது தான் மிச்சம்.பூங்கா என்ற பெயரில் புதர் வளர்த்திருக்காங்க; இதனால் சுற்றுப்புற சுகாதாரத்துக்கும் பயனில்லை. கொசுக்கள், ஜந்துக்கள் உருவாக பாதுகாப்பான இடமாக மாறியிருப்பதை தான் பார்க்க முடிகிறது. வார்டின் உறுப்பினர்களுக்கு தங்கள் வார்டில் உள்ள பூங்கா பற்றி நினைவு இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE