மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூட உத்தரவு

Added : ஜன 12, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ம் தேதி வடலுார் ராமலிங்கர் நினைவு நாள், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாட்கள் அனைத்து மதுபானக் கடைகள், அரசு மதுபானக் கூடங்கள் எப்.எல்.3 பார்கள் மூடப்பட வேண்டும்.கடைகளை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ம் தேதி வடலுார் ராமலிங்கர் நினைவு நாள், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாட்கள் அனைத்து மதுபானக் கடைகள், அரசு மதுபானக் கூடங்கள் எப்.எல்.3 பார்கள் மூடப்பட வேண்டும்.கடைகளை திறந்து மதுபானங்களை விற்றாலோ, அரசு பார்கள் மற்றும் எப்.எல்.2 மற்றும் 3, பார்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 உரிமையாளர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X