தரக்குறைவான விமர்சனம்; செய்னாவிடம் மன்னிப்பு கோரிய சித்தார்த்

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (52)
Advertisement
புதுடில்லி: பாட்மின்டன் வீராங்கனையை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் சித்தார்த், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதற்கு இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பாய்ஸ் உள்ளிட்ட தமிழ்
Siddharth, Apologises, Saina Nehwal, Rude Joke, சித்தார்த், சாய்னா நேவல், மன்னிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பாட்மின்டன் வீராங்கனையை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் சித்தார்த், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதற்கு இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பாய்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சித்தார்த், பெண்களை அவமதிக்கும் வகையில் செய்னாவை விமர்சித்தார்; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன்னுடைய பதிவிற்கு சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக செய்னாவிற்கு அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தில் கூறியுள்ளதாவது: சில நாட்களுக்கு முன்பு உங்கள் பதவிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் பதிவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த் .......


latest tamil news


என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்றொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும். இருப்பினும், எனது பதிவானது, வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது மட்டுமே. அதற்கு அனைத்து தரப்பினரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள். இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202207:36:34 IST Report Abuse
மோகன் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் பெருமை தேடி தந்த தங்கப்பெண். அவரை பற்றி கிண்டலாக பதிவிட இவனுக்கு யோக்கியதை இல்லவே இல்லை. இவன் நாட்டுக்காக என்னத்த சாதித்துள்ளான். ஒரு மன்னாங்கட்டியும் கிடையாது. இவனை எல்லாம் 10 வருடங்களுக்கு திரையில் நடிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரக்கூடாது. அதுதான் இவனுக்கு சரியான தண்டனை...
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
12-ஜன-202222:03:45 IST Report Abuse
r ravichandran பெண்ணியவாதிகள் கனிமொழி ,ஜோதிமணி ஆகியோர் செவ்வாய் கிரகத்தில் தற்போது இருக்கின்றனர். அவர்கள் பூமிக்கு திரும்பி வந்தவுடன் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
12-ஜன-202220:46:04 IST Report Abuse
r ravichandran சாய்னா நேவால் , விவசாயிகளுக்கு ஆதரவாகவும் , மோடி அவர்களுக்கு எதிராகவும் ட்வீட் போட்டு இருந்தா , சித்தார்த் பாராட்டி டுவிட் போட்டு இருப்பார். இவரது எண்ணம் மோடியை ஆதரித்து பேசுபவர்களை கேவல படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X