லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: கோவிட் பாதிப்புடன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் அடுத்து 10 -12 நாட்கள் ஐசியூ.,வில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று கோவிட் உறுதியானது. இதனை தொடர்ந்து
LataMangeshkar, Lata Mangeshkar, covid, phnemonia,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: கோவிட் பாதிப்புடன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் அடுத்து 10 -12 நாட்கள் ஐசியூ.,வில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று கோவிட் உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ., வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உறவினர்கள் கூறுகையில், லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்பட்டது. அவர் நலமுடன் உள்ளார். வயது முதிர்வை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.சி.யூ., வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமடைய பிரார்த்தனை செய்யுங்கள் எனக்கூறியிருந்தார்.


லதா மங்கேஷ்கருக்கு கொரோனாவுடன் நிமோனியா .......

latest tamil news




இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரதிட் சம்தானி கூறுகையில், லதா மங்கேஷ்கர் தொடர்ந்து ஐசியூ.,வார்டில் தான் இருப்பார். அடுத்த 10- 12 நாட்களுக்கு அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார். கோவிட்டுடன் அவர், நிமோனியா காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
12-ஜன-202222:11:27 IST Report Abuse
THINAKAREN KARAMANI சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
12-ஜன-202213:38:02 IST Report Abuse
krish தேசிய இசைக்குயில் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டி அமைவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X