கவுன்சிலர்களை மிரட்டும் தி.மு.க.,; கலெக்டரிடம் புகார் சொன்ன அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கடலுார்: ஒன்றிய கவுன்சிலர்களை கட்சியில் சேர தி.மு.க., வினர் மிரட்டுகின்றனர் என, அ.தி.மு.க., ஏம்.எல்.ஏ.,க்கள் இருவர் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.கடலுார் மாவட்டத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், கடலுாரில் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம் அளித்த மனு:கடலுார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடலுார்: ஒன்றிய கவுன்சிலர்களை கட்சியில் சேர தி.மு.க., வினர் மிரட்டுகின்றனர் என, அ.தி.மு.க., ஏம்.எல்.ஏ.,க்கள் இருவர் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.

கடலுார் மாவட்டத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், கடலுாரில் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம் அளித்த மனு:



latest tamil news




கடலுார் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்துமீறி அதிகாரம் செலுத்துகின்றனர். அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி வளர்ச்சி பணிகளில் குறுக்கீடு செய்கின்றனர். ஒன்றிய கவுன்சிலர்களை மிரட்டி தி.மு.க.வில் சேர வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பணத்தாசை காட்டியும் தி.மு.க.,வில் சேர மிரட்டி வருகின்றனர். விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் தி.மு.க.,வின் மிரட்டலுக்கு பயந்து அக்கட்சியில் சேர்ந்ததால், கடந்த 21ம் தேதி கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் கோரிய மனு மீது, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுக்கவில்லை.


latest tamil news




ஆனால், நல்லுார் ஒன்றியம் தொடர்பாக போலி கையெழுத்து, போலி சீல் மற்றும் போலி லெட்டர் பேடுடன் பெறப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரும் 20ம் தேதி அவரது தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் வைத்துள்ளார். இது சட்ட விரோத செயலாகும். இது போன்று ஒன்றியக்குழு கவுன்சிலர்களை மிரட்டி, வளர்ச்சி பணிகளில் ஆளுங் கட்சியினர் குறுக்கீடு செய்வதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஜன-202200:44:02 IST Report Abuse
DARMHAR அரசியலில் ஆளுங்கட்சிகள் மாறும்போது காட்சிகளும் மாறுவது இயல்பே
Rate this:
Cancel
rajasekaran - neyveli,இந்தியா
12-ஜன-202217:57:28 IST Report Abuse
rajasekaran ஏன் சென்னை கோர்ட்டை இவர்கள் நடக்காதது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொது ஏவானவை விட்டு கேஸ் போடுவார்கள்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
12-ஜன-202212:55:02 IST Report Abuse
Narayanan திமுக இப்படித்தான் நடக்கும் . ஏன் இவர்கள் பிரதம மந்திரியையே மிரட்டுவார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X