பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் இளைஞர்கள்: பிரதமர் மோடி

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுச்சேரி: ''நமது வளர்ச்சியை முன்னெடுத்து செல்பவர்களாக இளைஞர்கள் உள்ளனர்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளனர்.புதுச்சேரியில், 25வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். இந்த விழாவில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையம் மற்றும் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்ட காமராஜர்
இந்தியா, இளைஞர்கள், பிரதமர்மோடி, நரேந்திரமோடி, இளைஞர்விழா, புதுச்சேரி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: ''நமது வளர்ச்சியை முன்னெடுத்து செல்பவர்களாக இளைஞர்கள் உள்ளனர்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், 25வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். இந்த விழாவில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையம் மற்றும் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தையும் திறந்து வைத்தார்.


latest tamil news


பின்னர் மோடி பேசியதாவது: இந்தியாவில் எல்லையில்லா இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று மக்கள் தொகை, மற்றொன்று இளைஞர்கள். ஜனநாயக மாண்பை நமது இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். நமது நாட்டின் வளர்ச்சிக்கான காரணிகளாக இளைஞர்கள் உள்ளனர். தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக மாண்பில் நமது இளைஞர் முன்னிலையில் உள்ளனர் நவீனத்தை பேசுவதால் இந்தியா இன்றும் இளமையாக உள்ளது. இந்தியாவின் வளம் பாரம்பரியம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கிறது.


latest tamil news




உலகிலேயே இந்தியாவில் தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களால் தான் புதிய உலகத்தை உருவாக்க முடியும். இந்திய இளைஞர்கள் மதிப்பீடு செய்வதில் முன்னேற்றம் வாய்ந்தவர்களாக உள்ளனர். கோவிட் காலத்தில் ஏராளமான புதிய தொழில்கள் துவங்கப்பட்டன. ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இளைஞர்கள் நாட்டுக்காக வாழ்வதோடு சுதந்திர போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்.


latest tamil news



குறைந்த காலத்தில் அதிக இளைஞர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இது நமது இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும்.இளைஞர்களின் திறமையை வளர்ப்பதற்காக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் திருமண வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டது. ஒவ்வொரு நிலையிலும் வளர்ச்சியை கண்கூடாக காண்கிறோம்.


latest tamil news


இந்திய பொருட்களை வாங்குவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். பொருட்களை வாங்கும் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும். நாம் மண்ணின் மைந்தர்கள் என்பதை இதன் மூலம் நிரூபிக்க வேண்டும். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். உள்நாட்டு யாரிப்புகளை வாங்கினால் தன்னிறைவு இந்தியா மேம்படும்.உங்களின் கடமையை உணர்ந்து தலைமை பண்புடன் உழைக்க வேண்டும். நம் நாட்டின் போர் வீரர்கள் எண்ணற்ற செயல்களை செய்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202209:23:10 IST Report Abuse
Hari Commentil niraya ariveeligal
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
12-ஜன-202223:20:08 IST Report Abuse
Venkatakrishnan ஆமாம்... 60 வருடங்களில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம் கடந்த நான்கு வருடங்களாக நீட்டித்து நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள் ஜீ... பலே சங்கீஸ் பலே...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
12-ஜன-202223:17:08 IST Report Abuse
Venkatakrishnan உமது கூட்டத்தின் அதீத அறிவால் ஏற்கெனவே லட்சக்கணக்கான இளைஞர்கள் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புகளும், பாதுகாப்பான சூழலுக்கும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள்... இதே நிலை தொடர்ந்தால், உமக்கு துதிபாடும் சங்கிமங்கீகளைத் தவிர அறிவுள்ளோர் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் பழுத்த அரசியல் சாணக்யன்யா நீ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X